மொபைலில் தேவையில்லாத நோடிபிகேஷன்களை ஆப் செய்வது எப்படி?
அதிகப்படியான நோடிபிகேஷன்கள் மொபைல் ஸ்கிரீனில் பார்க்கும்போது எரிச்சல்கூட வரும். இதனை கட்டுப்படுத்த சில வழிகள் உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் இல்லாத ஒரு நாளை நினைத்து பார்ப்பது என்பது பலருக்கும் இயலாத காரியம். அந்தளவுக்கு அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட ஸ்மார்ட்போனில் இருந்து பணப்பரிவர்த்தனை முதல் ஆஃபீஸ் வேலைகளைக் கூட செய்துவிட முடியும். அந்தளவுக்கான தொழில்நுட்பங்கள் செல்போன்களிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த தொழில்நுட்பங்களால் சில நேரங்களில் எரிச்சல் ஏற்படுவதையும் தடுக்க முடியாது.
அந்த செயலிகள் தேவையற்ற சில நோடிபிகேஷன்களையுன் டஜன் கணக்கில் அனுப்பிக் கொண்டே இருக்கும். மொபைலை ஓபன் செய்தால் ஸ்கிரீனின் மேற்புறத்தில் அந்த நோடிபிகேஷன்கள் குவிந்து கிடக்கும். பயன்படுத்தும் செயலிகள் அனைத்தும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக அத்தகைய புஷ் நோடிபிகேஷன்களை அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். அதிகப்படியான புஷ் நோடிபிகேஷன்களால் சில தேவையான நோடிபிகேஷன்களைக் கூட நாம் தவறவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியான நோடிபிகேஷன்களை தவறவிடாமல் இருக்கவும், அதிகப்படியான புஷ் நோடிபிகேஷன்களை தவிர்ப்பது எப்படி என்பதையும் பலரும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.
மேலும் படிக்க | Used Cars: ரூ. 19,000-ல் கூட கார் வாங்கலாம், மாருதி சுசுகி அளிக்கும் அசத்தல் ஆஃபர்
புஷ் நோடிபிகேஷன்
உங்களுக்கு தேவையான செயலிகள் சிலவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருப்பீர்கள். அவற்றில் ஒரு சில செயலிகள் தற்காலிக பயன்பாட்டுக்காகவும், ஒரு சில ஆப்கள் அன்றாட பயன்பாட்டுக்காகவும் இருக்கும். முதலில் தற்காலிகமாக பயன்படுத்தும் செயலிகளை அடையாளம் கண்டு உங்கள் மொபைலில் இருந்து நீக்குங்கள். இதன் மூலம் சரிபாதி புஷ் நோடிபிகேஷன்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அடுத்ததாக அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் நோடிபிகேஷன் வருவதை செட்டிங்ஸ் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.
செயலிகளின் செட்டிங்ஸ் மாற்றம்
அன்றாடம் பயன்படுத்தும் செயலிகளில் நீங்கள் நோடிபிகேஷன்களில் மாற்றம் செய்ய விரும்பினால், உங்கள் மொபைலில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லுங்கள். அதில் ஆப் நோடிபிகேஷன் (App Notification) ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அங்கு உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து செயலிகளும் வரிசையாக இருக்கும். அவற்றில் நோடிபிகேஷன் தேவையில்லை என நினைக்கும் செயலிகளை தேர்ந்தெடுத்து நோடிபிகேஷனை ஆப் செய்துவிடுங்கள். இந்த மாற்றத்தை செய்யும்போது உங்கள் மொபைலுக்கு தேவையற்ற நோடிபிகேஷன்கள் வராது.
மேலும் படிக்க | Xiaomi-ன் சூப்பரான பேட்டரி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR