வாட்ஸ்ப் அப் வீடியோ -போட்டோக்களை ஆப்லைனில் பேக்அப் செய்யலாம்! எப்படி?
வாட்ஸ்அப்பில் வரும் போட்டோ மற்றும் வீடியோக்களை ஆப்லைனிலேயே நீங்கள் பேக் செய்து கொள்ளலாம். இதற்கு இண்டர்நெட் தேவையில்லை. எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், பில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. மிக எளிதாக அனைவரும் பயன்படுத்தமுடியும் என்பது வாட்ஸ்அப் செயலியின் சிறப்பான அம்சமாக இருப்பதால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். மேலும், புகைப்படங்கள், வீடியோக்களையும் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் எங்கிருந்தாலும் வீடியோ கால் செய்து பேசிக் கொள்ளலாம். இதுதவிர, முக்கியமான பைல்கள் புகைப்படங்களையும் நீங்கள் பேக்அப் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் கொடுக்கிறது. உதாரணமாக, வாடிக்கையாளர்கள் கூகுள் டிரைவ், ஐ கிளவுட் மூலம் வாட்ஸ்அப் பைல்களை நீங்கள் பேக்அப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதில் பேக்அப் எடுக்க விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு ஆப்லைனில் பைல்களை பேக்அப் எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
மேலும் படிக்க | Amazon Pay ஆப்பில் மறைந்திருக்கும் சூப்பர் ஆப்ஷன்! பணத்தை ஈஸியாக சேமிக்கலாம்
ஆப்லைனில் வாட்ஸ்அப் பேக்அப் செய்வது எப்படி?
ஆண்ராய்டு மொபைலை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பைல்களை நீங்கள் internal storage -ல் சேமித்து வைத்துக் கொள்ளலாம். வாட்ஸ்அப் போட்டோ, வீடியோ, GIFs என அனைத்தும் தனி தனி folder-களாக சேமித்து வைக்கப்படும். அதற்கு முதலில் நீங்கள் உங்கள் மொபைலில் Internal Storage மெனுவுக்கு செல்ல வேண்டும். அங்கு Androidd> media>-வில் com.whatsapp> பக்கத்தை கிளிக் செய்து அதில், WhatsApp> ஆப்சனுக்கு செல்ல வேண்டும்.
பின்னர், வாட்ஸ்அப் folder-ல் sub-folders இருக்கும். WhatsApp Animated Gifs, WhatsApp Audio, WhatsApp Images and WhatsApp Video எனத் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கும். அதில் இருக்கும் தகவல்களை நீங்கள் ஆஃப்லைனில் கணினி அல்லது லேப்டாப்பில் பேக்அப் செய்து, பின்பு உங்கள் external hard drive-ல் சேமித்துக் கொள்ளலாம். அதற்கு, உங்கள் போனை கணினி அல்லது லேப்டாப்பில் கனெக்ட் செய்து, மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாட்ஸ்அப் folder பக்கம் சென்று copy செய்து பேக்அப் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட folder அல்லது மொத்தமாகவும் பேக்அப் எடுத்துக் கொள்ளலாம். புதிய போனில் வாட்அப் reinstall செய்யும் போது உங்களுக்கு தேவையான ஃபைல்களை இதிலிருந்து மாற்றிக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ