இன்ஸ்டாகிராம் ரீல்ஸை எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி?
இன்ஸ்டாகிராம் ரீலஸ் இப்போது பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.
டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனை சரியாக புரிந்து கொண்ட அந்த நிறுவனமும், வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப புதுப்புது அப்டேட்டுகளைக் கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. டிக்டாக் செயலிக்கு போட்டியாகவே ரீல்ஸை அறிமுகப்படுத்திய இன்ஸ்டாகிராம், இப்போது அதில் பல்வேறு அப்டேட்டுகளைக் கொண்டு வந்து யூசர்களின் நேசத்துக்குரிய செயலியாக மாறியுள்ளது.
இன்ஸ்டாகிராம் முதலில் புகைப்படங்களை பதிவிடும் செயலியாக அறிமுகமாகி பின்னர் வீடியோ செயலியாக அப்கிரேடானது. அதில் IGTV வீடியோ, ஸ்டோரீஸ், லைவ் வீடியோ மற்றும் ரீல்கள் ஆகியவற்றை செய்ய முடியும். இவை தவிர மற்றவர்கள் பகிரும் நல்ல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் யூசர்கள் சேமித்து வைத்துக் கொள்ளலாம். சிலருக்கு அந்த ரீல்களை தங்கள் மொபைல்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்ற ஆசை இருக்கும்.
மேலும் படிக்க | வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் லொகேஷன் ஸ்டிக்கரை வைப்பது எப்படி ?
இவ்வளவு நாள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை டவுன்லோடு செய்வது எப்படி? என தெரியாமல் இருந்தால் இந்த வழிமுறையை பின்பற்றுங்கள். அதற்கு முன்னதாக, இன்ஸ்டாகிராம் ரீலஸ் என்றால் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 60 செகண்ட் வீடியோவை பகிரக்கூடிய ஒரு பொழுதுபோக்கு தளம் தான் ரீல்ஸ். தொடர்ச்சியாகவோ அல்லது எடிட் செய்தோ இதில் வீடியோக்களை ரீல்ஸாக பகிர முடியும்.
இன்ஸ்டா ரீல்ஸ் செய்வது எப்படி?
1. இன்ஸ்டாகிராம் செயலியில் வலது பக்கம் ஸ்வைப் செய்து கீழே இருக்கும் ரீல் ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்
2. இன்னொரு வழியும் இருக்கிறது. ஆப்பில் இருக்கும் பிளஸ் ஐகானை சொடுக்கினால் கூட ரீல்ஸூக்கு நேரடியாக நீங்கள் செல்லலாம்.
3. இப்போது வீடியோவுக்கு நடுவில் இருக்கும் பிளேயர் ஐகானை அழுத்திப் பிடித்து வீடியோ பதிவு செய்யுங்கள்
4. பின்னர், அதற்கு பொருத்தமான புகைப்படம் மற்றும் ஸ்டிக்கர், மியூசிக் சேர்த்து ஷேர் ஆப்சன் மூலம் பகிருங்கள்.
இப்போது ரீல்களை எவ்வாறு பதிவிறக்குவது? என்று பார்க்கலாம்
1. முதலில் Reels Downloader செயலியை பதிவிறக்கவும்.
2. பின்னர், உங்கள் ஸ்மார்ட்போனில் Instagram -ஐத் திறந்து, ரீல்ஸ் பகுதிக்குச் செல்லவும்.
3. இப்போது நீங்கள் பதிவிறக்க விரும்பும் ரீலின் லிங்கை காபி செய்யுங்கள்.
4. அதனை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோடரில் பேஸ்ட் செய்து டவுன்லோடு செய்யுங்கள்
5. செயலியை டவுன்லோடு செய்யாமல் ஆன்லைன் மூலமாகவும் ரீல்ஸை டவுன்லோடு செய்யலாம்.
மேலும் படிக்க | Tata Motors: கார்களின் விலையை அதிகரித்தது நிறுவனம், விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR