அப்போலோ மருத்துவமனை வளாகங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் வசதி ஏற்படுத்து மத்திய அரசு அப்போலோ நிர்வாகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போலோ மருத்துவமனைகள் நிர்வாகத்துடன் மத்திய அரசின் எரிசக்தி திறன் சேவைகள் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகங்களில் பொதுப் பயன்பாட்டுக்கான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஒப்பந்தமானது ஒரு பொதுத்துறை சேவைக்காக அரசு தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளும் முதல் ஒப்பந்தம் எனக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மருத்துவமனை வளாகங்களில் அமைக்கப்படும் சார்ஜிங் நிலையங்களுக்கான முதலீடு, பணியாட்கள் நியமனம், பராமரிப்பு ஆகிய செலவுகளை மத்திய எரிசக்தி திறன் சேவை மையமே ஏற்றுக்கொள்ளும்.


அப்போலோ நிர்வாகம் சார்ஜிங் நிலையங்களுக்குத் தேவைப்படும் இடவசதி மற்றும் மின்சார உதவியை மட்டும் அளிக்கும். எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க அரசு இந்த ஒப்பந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து EESL திட்டங்களுக்கான இயக்குனர் வெங்கடேஷ் திவேதி தெரிவிக்கையில் "மின்சார வாகனங்கள் (EV) மீது நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கு ஒரு வலுவான துணை உள்கட்டமைப்பை உருவாக்குவது மிக முக்கியம். அப்பல்லோ மருத்துவமனைகளுடனான எங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் தேசிய மின்சார இயக்கம் திட்டத்தின் இலக்கை அடைவதில் தனியார் துறையின் பங்கை வலுப்படுத்துகிறது.


வான்வழி உமிழ்வைக் குறைப்பதற்கும் காற்றின் தரத்தை உயர்த்துவதற்கும் மின்சார இயக்கம் மிக முக்கியமானது, இது சுகாதாரத் துறையுடன் எதிரொலிக்கக் கூடிய ஒரு காரணமாகும்" என தெரிவித்துள்ளார்.