டிவிட்டர் தளத்தை வாங்கிய எலான் மஸ்க் அதனுடைய லோகோ முதல் டிவிட்டர் என்ற பெயர் வரை அதிரடியாக மாற்றினார். அவரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் டிவிட்டர் தளத்தை வருவாய் தளமாக மாற்றும் நோக்கிலேயே இருந்தது. அதில் ஒன்று ஒருநாளை குறிப்பிட்ட டிவிட்களை மட்டுமே பார்க்க முடியும் என கொண்டு வந்த அறிவிப்பு சர்ச்சையில் சிக்கி, அதனை மட்டும் மாற்றினார். மற்ற மாற்றங்களை செய்வதில் அவருக்கு பெரிதாக எந்த சிக்கலும் வரவில்லை. அதனால் சப்ஸ்கிரிப்சன் முறையை கொண்டு வந்தார். அவர்களுக்கு மட்டுமே ப்ளூடிக் கொடுத்து டிவிட்டர் அறிவிக்கும் அனைத்து புதிய அறிவிப்புகளுக்கான அணுகல்களையும் கொடுத்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் வாங்க திட்டமா? செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் சூப்பர் போன்கள்...


எக்ஸ் தளத்தை பயன்படுத்தி ஒருவர் சம்பாதிக்க நினைத்தாலும், அவர் ப்ளூ டிக் சப்ஸ்கிரிப்சன் வைத்திருக்க வேண்டும். இதனை அறிவிப்போடு நிறுத்திவிடாமல் செய்து காட்டி வருகிறார் எலான் மஸ்க். யூடியூப் தளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதனை சம்பாதிக்கும் வழிமுறையாகவும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால், அதற்கு இணையாக எக்ஸ் தளத்தை மாற்ற வேண்டும் என்பது எலான் மஸ்க் கணிப்பு. இதில் இவருக்கு இருக்கும் கூடுதல் சலுகை என்னவென்றால் எக்ஸ் தளத்தை கன்டென்ட் ரைட்டப்கள் வழியாகவும் பயனர்களை சம்பாதிக்க வைக்க முடியும். வீடியோ எல்லாம் நீங்கள் உருவாக்க தேவையில்லை. நல்ல தகவல்களை எழுதி, அது அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்த்திருந்தாலே உங்களுக்கு வருமானம் வரும். 


யூடியூப் தளத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் 30 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்தபட்சம் முதலீடாவது தேவை. ஆனால் டிவிட்டர் தளத்தில் அறிவை மட்டும் முதலீடு செய்து ஒரு பைசா செலவில்லாமல் சம்பாதிக்க முடியும்.



இது தான் எக்ஸ் தளத்தின் வெற்றிக்கான படியாகவும் மஸ்க் பார்த்து வருகிறார். அதனடிப்படையில் புதுப் புது மாற்றங்களைக் கொண்டு வரும் அவர், இப்போது சிம் கார்டே தேவையில்லை யூசர்கள் எக்ஸ் தளத்தின் மூலம் வீடியோ கால் செய்து பேச முடியும் என அறிவித்துள்ளார்.  ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு ஏற்ப அனைத்து அம்சங்களும் வர இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு இப்போது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன மாற்றங்களையெல்லாம் அவர் களமிறக்கபோகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. 


மேலும் படிக்க | 180cc மாடலில் ஸ்டைலான பைக் வேண்டுமா... டிவிஎஸ் vs ஹோண்டா - எதை வாங்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ