180cc மாடலில் ஸ்டைலான பைக் வேண்டுமா... டிவிஎஸ் vs ஹோண்டா - எதை வாங்கலாம்?

Best Bikes On 180cc: 180சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களில் புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 அல்லது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஆகியவற்றில் எதை வாங்கலாம் என்பதை இதில் காண்போம்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 30, 2023, 12:40 PM IST
  • புதிய ஹோண்டா ஹார்னெட் விலை - ரூ. 1.39 லட்சம்
  • டிவிஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 விலை - ரூ. 1.32 லட்சம்.
  • ஹார்னெட்டை விட அப்பாச்சி வெறும் ரூ. 7 ஆயிரம் குறைவு.
180cc மாடலில் ஸ்டைலான பைக் வேண்டுமா... டிவிஎஸ் vs ஹோண்டா - எதை வாங்கலாம்? title=

Best Bikes On 180cc: 180சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களில் இப்போது புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 இடையே கடும் போட்டி இருக்கும். இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் சமீபத்திய தயாரிப்பு புதிய ஹோண்டா ஹார்னெட் 2.0 ஆகும். இதன் விலை ரூ. 1.39 லட்சமாக (Ex-Showroom) உள்ளது. அதே நேரத்தில் டிவிஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கின் விலை ரூ.1.32 லட்சமாக (Ex-Showroom) உள்ளது. சரி, இரண்டில் எதை வாங்கலாம், எந்தெந்த வாடிக்கையாளர்கள் எதை வாங்கலாம் என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு பைக்குகளின் வடிவமைப்பு

வடிவமைப்பைப் பற்றி அதிகம் பேசுவது சரியாக இருக்காது. ஏனென்றால் வடிவமைப்பு தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வடிவமைப்பு பிடிக்கலாம். அதே நேரத்தில் மற்றொருவர் அதே வடிவமைப்பை மோசமானதாகவும் காணலாம். ஸ்போர்ட்ஸ் பைக் மாடலின் உணர்வு, ஹார்னெட்டில் அதிகமாக உள்ளது. அதே சமயம் அப்பாச்சியின் வடிவமைப்பு ஒப்பீட்டளவில் குறைவான ஸ்போர்ட்ஸ் உணர்வை அளிக்கும்.

எஞ்சின்

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சினுடன் வருகின்றன. ஹார்னெட் 184.4cc (17bhp, 16Nm) எஞ்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர் 180, மறுபுறம், 177.4cc (16.7bhp, 15.5Nm) இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அப்பாச்சியில் பவர் டெலிவரி சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | ஸ்பீட் 400 மற்றும் கிளாசிக் 350 போட்டி வச்சா எது பெஸ்ட்? சிறப்பம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

புதிய ஹோண்டா ஹார்னெட்டில் 17 இன்ச் வீல்கள், எல்இடி லைட்டிங், யுஎஸ்டி ஃபோர்க்குகள், பின்புற மோனோஷாக், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், இரண்டு டிஸ்க் பிரேக்குகள், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்கள் உள்ளன.

அதேபோன்று, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 ஆனது டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஷாக்ஸ், 17 இன்ச் வீல்கள், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ், ட்வின் டிஸ்க் பிரேக்குகள், ப்ளூடூத் இணைப்பு மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவற்றைப் பெறுகிறது. USD ஃபோர்க்குகளுக்கு இருப்பதால் ஹோண்டா ஹார்னெட் அப்பாச்சியை விட சிறந்த அம்சமாகத் தெரிகிறது. 

எதை வாங்குவது?

ஹோண்டா ஹார்னெட் ஸ்போர்ட்ஸ் பைக் உணர்வை அளிக்கும் வகையில் உள்ளது. சிறந்த உதிரிபாகங்கள் மற்றும் ஹோண்டாவின் உத்தரவாதத்துடன் வருகிறது. இருப்பினும், கையாளுதலின் அடிப்படையில், டிவிஎஸ் அப்பாச்சி மிகவும் சக்திவாய்ந்ததாகத் தெரிகிறது. விலையில் ரூ. 7,000 மட்டுமே வித்தியாசம் உள்ளது, எனவே இரண்டும் நல்ல விருப்பங்கள். இருப்பினும், சவாரி அனுபவத்தின் மூலம் மட்டும், அப்பாச்சி ஆர்டிஆர் சிறப்பாக இருக்கும் என வல்லுநர்களால் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பயங்கர விபத்திலும் உயிரை காப்பாற்றும்... டாப் 10 பாதுகாப்பான கார்கள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News