கூண்டை விட்டு பறந்த பறவை... டிவிட்டரை கைப்பற்றினார் எலான் மஸ்க்!
டிவிட்டர் பங்குகளை மொத்தமாக 44 பில்லியன் டாலர் தொகைக்கு, டெஸ்லா நிறுவன தலைமை அதிகாரி எலான் மஸ்க் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் CEO எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை, 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் போட்டிருந்தார். இந்த நிலையில் போலி கணக்குகள் குறித்த விவரம் வேண்டும் என்றும், அதை வழங்க நிறுவனம் மறுப்பதாகவும் எலான் மஸ்க் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்கத் தவறினால், இந்த ஒப்பந்தத்தை கைவிடப் போவதாக எலோன் மஸ்க் அறிவித்ததை அடுத்து டிவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது.இதை அடுத்து ஒப்பந்தத்தில் இருந்து விலக மஸ்க் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியது ட்விட்டர்.
இந்நிலையில், டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலோன் மஸ்க் இப்போது ட்விட்டரின் புதிய உரிமையாளராக மாறியுள்ளார். அவர் ட்விட்டரின் தலைமைப் பொறுப்பை ஏற்றவுடன் நிறுவனத்தில் இருந்து CEO பராக் அகர்வால் மற்றும் CFO நெட் செகல் ஆகியோரை, சட்ட பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா காடே அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளார்.
முன்னதாக, டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினாலும் எலோன் மஸ்க் கிட்டத்தட்ட 75% ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளார் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது. ட்விட்டர் நிறுவனத்தை சுமார் ரூ.3.62 லட்சம் கோடிக்கு கையகப்படுத்திய எலான் மஸ்க். ட்விட்டர் தான் வாங்கியது பணம் சம்பாதிப்பதிற்காக அல்ல, மனிதகுலத்திற்கு உதவுவதற்காக என்று மஸ்க் கூறினார்.
மேலும் படிக்க | டிவிட்டரை வாங்கினா 75% பணியாளர்களை தூக்கிடுவேன்! எலோன் மஸ்க் திட்டம்?
ட்விட்டரை வாங்குவதற்கான 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை மஸ்க் முடித்துவிட்ட நிலையில், எலான் மஸ்க், குறைந்தபட்சம் நான்கு உயர் அதிகாரிகளின் பணிநீக்கத்துடன் ட்விட்டரில் வீட்டை சுத்தம் செய்யத் தொடங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
சமூக வலைத்தளத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி பதவி விலகியதை அடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில் அகர்வால் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆரோக்கியமாக இருக்க உண்ணாவிரதம்; நண்பரின் அறிவுறையை பின்பற்றும் Elon Musk!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ