ஆரோக்கியமாக இருக்க உண்ணாவிரதம்; நண்பரின் அறிவுறையை பின்பற்றும் Elon Musk!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் சமூக ஊடகங்களில், தனது வாழ்க்கை முறை பற்றிய தகவல்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 29, 2022, 08:02 PM IST
ஆரோக்கியமாக இருக்க உண்ணாவிரதம்; நண்பரின் அறிவுறையை பின்பற்றும்  Elon Musk! title=

உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவர் தனது வாழ்க்கை முறை பற்றிய தகவல்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். தற்போது எலான் மஸ்க் தனது உணவுப் பழக்கம் குறித்து கூறியுள்ளார். அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வருவதால் ஆரோக்கியமாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார். உண்ணாவிரதம் இருக்குமாறு ஒரு நல்ல நண்பர் தனக்கு அறிவுறுத்தியதாக அவர் கூறினார். 

ஜாக் டோர்சி எலோன் மஸ்க்கிற்கு அறிவுரை வழங்கினாரா?

எலோன் மஸ்க்கின் இந்த ட்வீட்டை கண்ட அவரது ஃபாலோயர்கள் பல கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இது ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியாக இருக்குமோ என்றும் நெட்டிசன்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். டெஸ்லா சிஇஓ மஸ்க் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில், 'ஒரு நல்ல நண்பரின் ஆலோசனையின் பேரில், அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறேன், ஆரோக்கியமாக உணர்கிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

மஸ்க், 'அவ்வப்போது, ​​எனக்கு பலனளித்த சில விஷயங்களை, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் பகிர்ந்து கொள்கிறேன்' என்றார். எலோன் மஸ்க்கிற்கு பதிலளித்த ஒரு பயனர், அவர் டோர்சியா என்று கேலி செய்தார், ஏனெனில் அவர் வாரத்திற்கு ஏழு வேளை மட்டுமே சாப்பிடுவார் என்று அவர் முன்பு ஒப்புக்கொண்ருந்தார்.

உண்ணாவிரதத்தால்  எலான் மஸ்ட எடை குறைந்ததா?

எலான் மஸ்க் எவ்வளவு எடையை இழந்தார் என்று கேட்டபோது, ​​'எனது (ஆரோக்கியமற்ற) அதிக எடையிலிருந்து 20 பவுண்டுக்கும் அதிகமான அளவில் குறைவாக’  என்று பதிலளித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, 'தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ்' பாட்காஸ்டின் எபிசோடில் பேசிய எலோன் மஸ்க், சுவையான உணவை சாப்பிட விரும்புவதாகவும், உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க விரும்புவதாகவும் கூறினார்.

எனினும் அவர் சில பயிற்சிகளை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், 2020 ஆம் ஆண்டில், ஜாக் டோர்சி ஒரு வாரத்திற்கு ஏழு வேளை சாப்பிடுவதாகவும், அதில் அவர் இரவு உணவை மட்டுமே சாப்பிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | மீண்டும் ஆயுத சோதனை: 2 க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது வட கொரியா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News