Bgauss BG D15 Electric Scooter: மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர் பீகாஸ் இந்தியாவில் புதிய பிஜி டி 15 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பி8 மற்றும் ஏ2 ஆகிய இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மின்சார ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.99,999 ஆகும். இது டாப் மாடலுக்கு ரூ.1.15 லட்சம் வரை செல்லும். புதிய மின்சார ஸ்கூட்டர் ஃபங்கி லுக், வலுவான பாடி மற்றும் ஸ்மார்ட் அம்சங்களுடன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் 3.2 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்குடன் வருகிறது. இது இகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய இரண்டு முறைகளில் வழங்கப்படுகிறது.


7 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தை எட்டிவிடும்
பீகோஸ் பிஜி டி15 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்போர்ட்ஸ் பயன்முறையில் மணிக்கு 0-60 கிமீ வேகத்தில் செல்ல வெறும் 7 வினாடிகள்தான் ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டருடன் நிறுவனம் 16 இன்ச் அலாய் வீல்களை வழங்கியுள்ளது. இவற்றின் உதவியுடன் சவாரி செய்பவருக்கு சுமூகமான மற்றும் வசதியான பயணம் கிடைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. 


மேலும் படிக்க | பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இந்த டிப்ஸ் உதவும், பணமும் பெட்ரோலும் மிச்சமாகும் 


ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்த மின்சார ஸ்கூட்டர் 115 கிமீ தூரம் வரை பயணிக்கும். மேலும் இதை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். இந்த ஸ்கூட்டர் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதும், புனேவை தளமாகக் கொண்ட ஆலையில் நிறுவனத்தின் உள் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் குழுவால் இது தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


பாதுகாப்பு அம்சத்தில் வலுவானது
பீகோஸ் பிஜி டி15 ஆனது 20 பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இதில் முழு நீர்ப்புகா IP67 மதிப்பிடப்பட்ட மின்சார மோட்டார் மற்றும் பேட்டரி ஆகியவை உள்ளன. இவை வெப்பநிலை மற்றும் தூசிக்கு எதிராகவும் பைக்கை பாதுகாக்கின்றன. வாகன ஓட்டிகள் ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கூட்டருடன் இணைய முடியும். 


இந்த மின்சார ஸ்கூட்டருடன் பிரிக்கக்கூடிய பேட்டரி, இன்-பில்ட் நேவிகேஷன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், புளூடூத் இணைப்பு, கீலெஸ் ஸ்டார்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் போன் கால்கள் மற்றும் அறிவிப்பு எச்சரிக்கைகள் ஆகிய அம்சங்கள் கிடைக்கும். இந்த ஸ்கூட்டர் மொபைல் செயலியுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான பைக்குகளை வாங்கணுமா? சிறந்த பைக்குகளின் பட்டியல் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR