உலகம் முழுக்க இணைய சேவையை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு தனி செயற்கைக்கோளை நிறுவ திட்டம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் கடந்த 2004-ம் முகநூலை அறிமுகம் செய்தார். உலக மக்களிடையே பெரும் பங்கை வைக்கிறது இந்த முகநூல்.  


சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாக தகவல்கள் வெளியாகி பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் தன்களின் சேவையை அதிகபடுத்த புதிய முயற்சியை எடுத்துள்ளது. 


இதை தொடர்ந்து, ஃபேஸ்புக் நிறுவனம் அதேனா (Athena) என்ற செயற்கைக்கோள் தயாரித்து விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த செயற்க்கைகோளை அடுத்த ஆண்டு செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கான திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் யுனைடெட் ஃபெடரல் கம்யூனிகேஷன் கமிஷனில் (Federal Communications Commission) தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் உலகில் உள்ள பாதுகாப்பான மற்றும் இணைய வசதியில்லா பகுதிகளுக்கு எளிமையாகப் பிராட்பேண்ட் சேவையை வழங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஃபேஸ்புக் நிறுவனம், “இந்தத் திட்டம் பற்றிய முழுமையான கருத்தைத் தற்போது தெரிவிக்க முடியாது. செயற்கைக்கோள் மூலம் உருவாக்கப்படும் பிராட்பேண்ட் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு முக்கியப் பயனாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இணைய வசதி குறைவாக உள்ள கிராமங்கள் மற்றும் முற்றிலும் இணைய வசதி இல்லாத இடங்களில் இதன் மூலம் எளிதாகப் பிராட்பேண்ட் கொண்டு வரமுடியும்’’ எனத் தெரிவித்தார்.