ஃபேஸ்புக் நிறுவனம் தனது டேட்டிங் சேவையை சோதனை முறையில், கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக அளவில் பல அமோக வலைத்தளங்கள் இயங்கி வந்தாலும் அனைத்திலும் முன்னிலையில் இருப்பது முகநூல் மட்டும் தான் என்ற கூறலாம். அமெரிக்காவைச் சார்ந்த சக்கர்பெர்க் என்பவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முகநூலை அறிமுகம் செய்தார். உலக மக்களிடையே பெரும் பங்கை வைக்கிறது இந்த முகநூல்.  


சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவலை மூன்றாம் நபர்களிடம் பகிர்வதாக தகவல்கள் வெளியாகி பல சர்ச்சையை ஏற்படுத்தியது. இளைஞர்கள் தங்கள் இணையை இணையத்தளம் மூலம் கண்டுபிடிக்க பல்வேறு செயலிகள் உள்ளன. இவற்றில் உள்ளே நுழைய ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பது அவசியம். 


இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனமே டேட்டிங் சேவையை முதன் முறையாக கடந்த செப்டம்பர் மாதம் சோதனை முறையில் கொலம்பியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இதே டேட்டிங் சேவையை கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சோதனை முறையில் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது. 
 
இந்த சேவை மூலம், ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உரையாடவும், தங்களுக்கான ஜோடிகளை தேர்வு செய்யவும் முடியும். இந்த சேவை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.