பயனர்களின் வருமாணத்தினை அடிப்படையாக கொண்டு அவர் ஏழை அல்லது வசிதிமிக்கவர் என பட்டியலிடும் வகையில் புதிய வசதி ஒன்றினை facebook அறிமுகப்படுத்த உள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயனர்களின் அனுமதியோடு, அவர்களின் காப்புரிமையை அடிப்படையில் அவர்களது சுயவிவரங்கள், படிப்பு, சமூக பொருளாதாக இணைப்புகளில் அவரகளின் பங்களிப்பு என அனைத்தினையும் கணக்கில் கொண்டு சமுக வலைதளங்களின் ஜாம்பவனான facebook பயனர்களின் சமூக பொருளாதார நிலையின் நிர்ணயிக்க உள்ளது.


இதன்படி பயனர்கள் உழைக்கும் வர்கம், நடுத்தர வர்கத்தினர் மற்றும் மேல் வர்கம் என 3 வகைகளாக பிரிக்கப்பட்டு, அந்த அடையாளத்தினை அவர்களது fcebook சுயவிவரப் பக்கத்துடன் காண்பிக்க திட்டமிட்டுள்ளனர்.


இதுகுறித்த குறிப்பாணை ஒன்றில் facebook நிறுவனம் கடந்த வெள்ளிகிழமை கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வகைப்பாட்டினால் உதவி செய்யக்கூடியவர், உதவி வேண்டுபவர் என மக்கள் வகைப்படுத்தப்படுவர் என facebook தெரிவித்துள்ளது.


இந்த வகைப்பாட்டினால் உதவி வேண்டுவோர், அளிக்கும் நிலையில் உள்ளவர்களை எளிதில் அனுகி உதவி பெற வாய்புகள் வழங்கவதே இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் facebook தெரிவித்துள்ளது.


இந்த வகைப்பாட்டில் பயனர் பதிய விரும்புகையில் அவர்களின் உரிய தேவைகளை facebook கோருகிறது. அதன் ஒரு பகுதியா பயனரின் வயது வரம்பினையும் கோருகிறது இதனால் வயது வாரியாகவும் இந்த வகைப்பாடுகள் அமைக்கப்படுகிறது என தெரிகிறது.


இந்த புதிய வசதிக்கான வரவேற்ப்பு என்பது எப்படி இருக்கும் என தெரியவில்லை எனினும் இந்த வசதி குறித்த தகவல்கள் பெரும்பாலும் பகிரப்பட்டு தான் வருகிறது.