பேஸ்புக்கில் ஸ்னூஸ் (Snooze) எனும் புதிய அம்சத்தை வரும் வாரங்களில் வழங்கப்பட இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய ஸ்னூஸ் (Snooze) அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பாதவர்கள், குறிப்பிட்ட பேஸ்புக் பக்கத்தை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியும். 


இந்த அம்சத்தை செயல்படுத்தியதும், 30 நாட்களுக்கு வாடிக்கையாளர் ஸ்னூஸ் (Snooze) செய்த நபர், அந்த பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்படும் பதிவுகளை பார்க்க முடியாது. 


வாடிக்கையாளர் மற்றவர்களை ஸ்னூஸ் (Snooze) செய்வது குறிப்பிட்ட நபருக்கு பேஸ்புக் தெரியப்படுத்தாது என்பதோடு குறிப்பிட்ட கால அவகாசம் நிறைவுறும் முன் பேஸ்புக் நோட்டிபிகேஷன் அனுப்பும் என்பதால் மீண்டும் அவரை பின்தொடர்வதை நீட்டிக்க முடியும்.