உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களானது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக். இந்த சேவைகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திடீரென முடங்கியது. நேற்று இரவு 9 மணியளவில் வந்த இந்த சேவைகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (Whatsapp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) முடக்கப்பட்டதால், பல நிறுவனங்களில் வேலை நிறுத்தப்பட்டது. எனவே சமூக ஊடகங்களில் #WhatsAppDown மற்றும் #FacebookDown ஆகியவை டிரென்ட் ஆகத் தொடங்கின. இந்த திடீர் சேவை முடக்கத்தால் வாட்ஸ்-அப்பில் செய்திகளை அனுப்பவும், வரும் செய்திகளை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. பல மணி நேரத்துக்கும் மேலாக இந்த சேவைகள் முடங்கி இருந்தது.


Also Read | டைப் செய்யாமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி?


இதற்கிடையே, தங்களின் சேவை முடங்கியது குறித்து அறிக்கை வெளியிட்டு வாட்ஸ் அப் நிறுவனம், தற்போது வாட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம், விரைவில் இங்கே ஒரு புதுப்பிப்பை அனுப்புவோம்'' என்று கூறியது.


தங்கள் சேவையில் தடங்கல் ஏற்பட்டதற்காக பேஸ்புக் மன்னிப்பு., எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் இந்த சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று பேஸ்புக் தெரிவித்தது.


இந்நிலையில் தற்போது இன்று அதிகாலை 4 மணி அளவில் மீண்டும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்படி சுமார் 8 - 9 மணி நேரத்துக்கும் மேலாக வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் சமூக வலைதள பயனாளர்கள் கடும் அவதிப்பட்டனர்.


இது மிகப் பெரிய சேவை பாதிப்பு என டவுண்டிடெக்டர் நிறுவனம் கூறியுள்ளது. உலகம் முழுவதும் 10.6 மில்லியன் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. அப்போது ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது. அதேபோல் கடந்த மார்ச் மாதம் சுமார் 17 நிமிடங்கள் இந்த சேவைகள் முடங்கியது. தற்போது, 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சேவைகள் முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டனர்.


Also Read | Govt Vacancies Available: அரசு வேலை வேண்டுமா? உங்களுக்கு ஏற்ற வேலை இதுவா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR