கொரோனா குறித்த தவறான பதிவுகளை லைக், கமெண்ட், ஷேர் செய்பவர்களுக்கும் எச்சரிக்கை தகவலை அனுப்ப ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13,387-யை எட்டியுள்ளது. மொத்த எண்ணிக்கையில் 11,201 செயலில் உள்ள வழக்குகள் உள்ளன. சுமார் 1,748 பேர் குணமடைந்து மருத்துவ மனையில் இருந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதில், 76 வெளிநாட்டினர் உள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து போலிச் செய்திகளும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்தும் விதமாக, “போலியான தகவல்களைப் பார்க்கும் முகநூல் பயனாளர்களுக்கு”, அதுபற்றிய ஒரு எச்சரிக்கை அறிவிப்பை அனுப்பவுள்ளதாக முகநூல் தெரிவித்துள்ளது.


இதனால் முகநூல் தடை செய்து நீக்கியுள்ள போலி செய்திகளையோ அல்லது பரப்பப் பட்ட வதந்திகளையோ பயனாளர்கள் லைக் அல்லது கமண்ட் மற்றும் ஷேர் செய்யும் பட்சத்தில், அவர்கள் உடனடியாக உலக சுகாதார நிறுவனத்தின் போலிச் செய்திகளைக் கண்டறியும் பக்கத்திற்கு முகநூல் மூலம் இட்டுச் செல்லப்படுவர். இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளதாக முகநூலின் இண்டக்ரிடி துணைத் தலைவர் கய் ரோஸன் தெரிவித்துள்ளார்.


முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் 40 மில்லியன் போலி பதிவுகளைத் தங்களது உண்மை கண்டறியும் நிறுவனங்கள் மூலம் கண்டுபிடித்த முகநூல் நிறுவனம், கொரோனா குணமாவது பற்றிய செய்திகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகளைக் கண்டறிந்ததோடு அவற்றை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் போலி பதிவிற்கான எச்சரிக்கையைப் பார்த்த பயனாளர்களில் ஒரு சிலர் மட்டுமே உண்மையைக் கண்டறிய முயன்றுள்ளனர்.


கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ், ஜனவரியில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோதே, முகநூல், யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட  சமூக வலைதளங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாப் செயலி மூலம் உலக சுகாதார நிறுவனத்தின் பக்கத்துக்கு இட்டுச் செல்லத் தொடங்கியது. இது தவிர, கொரோனாவுக்கு போலியான குணமளிக்கும் விளம்பரங்களையும் தடை செய்துள்ளது. ஆனால், முகநூல் நிறுவனமோ கொரோனா வைரஸ் பற்றிய தகவல் மையத்தையே கடந்த மாதம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.