சமூக ஊடகங்களின் ஜாம்பவானான பேஸ்புக் வீடியோ அரட்டை சாதனம் ஒன்றை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சாதனம் அமேசானின் எக்கோ ஷோக்கு ஒத்ததாகக் கூறப்படுகிறது, மற்றும் ஒரு கேமரா, தொடுதிரை மற்றும் ஒலிபெருக்கிகள் இதில் இடம்பெறும் என 'தி இன்டிபென்டன்ட்' தெரிவித்துள்ளது


எனினும் இச்சாதனம் நுகர்வோர் மத்தியில் அச்சத்தை எழுப்பியுள்ளது, காரணம் இது சமூக வலைப்பின்னல் மூலம் இனைக்கப் பட்டுள்ளதால் உளவு பார்க்க இயலும் என கருத்துகள் பரவி வருகிறது'.


இச்சாதனத்தை வரும் ஆண்டு மே மாதம் பேஸ்புக் வெளியிட திட்டமிட்டுள்ளது.


இருப்பினும், இது ஒரு புதிய பிராண்ட் பெயரில் சந்தையில் விழியாகும் என தெரிவித்துள்ளது.


தங்கள் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும் தொடர்பு கொள்ள இந்த சாதனம் ஒரு கருவியாக அமையும் எனவும் கூறியுள்ளது.