தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் வதந்திகள் உண்மையாக இருந்தால், ஐபோன் 14 சீரீஸ் மொபைல் இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும். ஆப்பிள் ஆர்வலர்கள் புதிய ஐபோன் ஃபிளாக்ஷிப், என்னென்ன அம்சங்களுடன் வரும் என்பதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர். இதற்கிடையில், வதந்திகள் மற்றும் மொபைல் பற்றிய தகவல் லீக் மார்க்கெட்டில் பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், அதிகாரப்பூர்வ ஆப்பிள் மொபைலைப் போலவே போலி ஐபோன் 14, ஆன்லைனில் வெளியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐபோன் சீரீஸ் வெளியாவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் முன்பே சில போலி ஐபோன்கள் ஆன்லைன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவது அந்நிறுவனத்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த விற்பனை நடந்துள்ளது. டெக் தகவல்களை லீக் செய்யும் சீனாவைச் சேர்ந்த மஜின் பு என்ற வலைஞர், போலி ஐபோன் 14 விற்பனை குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை 6.1-இன்ச் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ரோ. இரண்டும் 6.7 இன்ச் ஐபோன் 14-ஐ சித்தரிக்கின்றன.


மேலும் படிக்க | ஒரே ஸ்மார்ட்போனில் இரண்டு Whats app பயன்படுத்துவது எப்படி?


இதுகுறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனா தயாரிப்பு போன்களான அவை அசல் ஐபோன்கள் போலவே இருக்கும். ஐபோன் 14 மாடல்களின் லீக் தகவல்களை அடிப்படையாக வைத்து இதுபோன்ற போலியான ஐபோன்கள் உருவாக்கப்படுகின்றன. எனினும், ஐபோன் போலி இது முதன்முறையல்ல. ஏற்கனவே பல முறை போலியான ஐபோன்கள் மார்க்கெட்டில் இறக்கப்பட்டிருக்கிறது. 


மேலும் படிக்க | இந்தியாவின் ஆடம்பர மின்சார கார்கள்! ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் விலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ