ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் (Flipkart Big Saving Days Sale) தொடங்கவுள்ளது. இந்த விற்பனை மே மாதம் 4 ஆம் தேதி துவங்கவுள்ளது. பிளிப்கார்ட் அதன் பயனர்களுக்கு அவ்வப்போது பல கவர்ச்சிகரமான சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விற்பனைகளைக் கொண்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விரைவில் பிளிப்கார்ட் தனது புதிய விற்பனையான 'பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்'ஐத் தொடங்கப் போகிறது. இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு எந்தெந்த பொருட்களில் சலுகைகள் வழங்கப்படும், எவ்வளவு தள்ளுபடி பெறலாம் மற்றும் இந்த விற்பனை எப்போது தொடங்கும் ஆகிய விவரங்களை இந்த பதிவில் காணலாம். 


பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் இந்த நாளில் தொடங்கும்


மே 4 முதல், பிளிப்கார்ட்டில் 'பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்' தொடங்கும் என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிற நுகர்வோர் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படும். இந்த விற்பனை குறித்த தகவல் பிளிப்கார்ட் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.


பிளிப்கார்ட் டீசரை வெளியிட்டுள்ளது


விற்பனை தொடங்கும் முன், பிளிப்கார்ட் இது தொடர்பான டீசரை வெளியிட்டுள்ளது. பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் சாம்சங் கேலக்சி எஃப்12, ரியல்மி சி20, போக்கோ எம்3 மற்றும் ஐபோன் ஆகிய அனைத்து மாடல்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படும் என இந்த டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ரியல் மீ ஸ்மார்ட்போனை ரூ.266-க்கு வாங்க அருமையான வாய்ப்பு 


பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்கள் ஒரு நாள் முன்னதாகவே விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும், எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் மேலும் 10 சதவீத தள்ளுபடியைப் பெறுவார்கள் என்பதையும் வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். 


சலுகைகளின் விவரங்கள் இதோ 


- பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் கிடைக்கும் சில சலுகைகளைப் பற்றி பார்க்கலாம். 


- இந்த சேலில் சாம்சங் கேலக்சி எஃப்22 போனை ரூ.14,999க்கு பதிலாக ரூ.9,999க்கு வாங்கலாம். 


- போகோ எம்3 ப்ரோ 5ஜி போனை வாங்கும் எண்ணம் இருந்தால், அந்த போனை, ரூ.19,999க்கு பதிலாக ரூ.13,999-க்கு வாங்க முடியும். 


- ரெட்மி நோட் 10எஸ் போனை ரூ.16,999க்கு பதிலாக ரூ.11,999க்கு வாங்கலாம். 


- இந்த விற்பனையின் போது பல புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மே 4 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் மே 9 ஆம் தேதி முடிவடையும் என்பதை வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்வது நல்லது. 


மேலும் படிக்க | பிரைவசியில் அடுத்த அதிரடி! மொபைல் நம்பர், முகவரியை நீக்க உதவும் கூகுள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR