ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான பிளிப்கார்டில் பிளிப்கார்ட் சூப்பர் கூலிங் டேஸ் (Flipkart Super Cooling Days) ஏப்ரல் 20 முதல் நடந்துவருகிறது. இதில் அனைத்து குளிரூட்டும் சாதனங்களுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஹயரின் ஸ்பிளிட் ஏசி-ஐ இந்த விற்பனையில் பாதி விலையில் எப்படி வாங்குவது என்பதை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹயர் ஸ்பிளிட் ஏசி: பாதி விலைக்கும் குறைவாக வாங்கலாம்


பிளிப்கார்டின் இந்த டீலில், ஹேயர் 0.9 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி-யில் அதிரடியான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இதன் விலை சந்தையில் ரூ.50,990 ஆகும். எனினும் பிளிப்கார்ட் விற்பனையில், 50% தள்ளுபடிக்குப் பிறகு 24,990 ரூபாய்க்கு இது விற்கப்படுகிறது. 


இந்த டீலில் கொடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் சலுகையின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் இந்த ஏசியின் விலை ரூ.24,990ல் இருந்து ரூ.23,990 ஆக குறையும்.


வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்


ஹேயரின் இந்த டீலில் வங்கிச் சலுகையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிரெடிட் அல்லது டெபிட் கார்டை கொண்டு இதை வாங்கினால், ரூ.1,750 தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகது. 


ப்ரீபெய்டு சலுகைக்குப் பிறகு, இந்த ஏசி-ஐ வாங்க வங்கிச் சலுகையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பிறகு ரூ.50,900 மதிப்புள்ள ஹயர் 0.9 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசியை ரூ.22,240க்கு வாங்கிவிடலாம். 


மேலும் படிக்க | இந்தியாவில் அறிமுகமாகும் Oneplus Smartwatch! என்ன ஸ்பெஷல் இதில் 


ஹையர் ஏசியின் அம்சங்கள்


ஹையர் 0.9 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி மைக்ரோ ஆன்டி-பாக்டீரியல் ஃபில்டர் மற்றும் சூப்பர் ஆன்டி-கோரோஷன் தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஆட்டோ-ரீஸ்டார்ட் அம்சம் மற்றும் ஸ்லீப் பயன்முறையுடன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஸ்பிலிட் ஏசி 54 டிகிரி வரையிலான வெப்பநிலையிலும் கூட குளிர்ச்சியடையும். 


இது 100% தாமிரத்தால் ஆனது. இந்த ஏசி மீட்டர் வரை காற்றை வீசி சில நிமிடங்களிலேயே அறையை குளிர்விக்கிறது. ஹையர் 0.9 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி 3 நட்சத்திர மதிப்பீட்டுடன் வருகிறது, மின்சாரத்தையும் சேமிக்கிறது.


பிளிக்பார்டின் சூப்பர் கூலிங் டேஸ் விற்பனையில் இருந்து இதுபோன்ற பல சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விற்பனை ஏப்ரல் 25 வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஜில்லுனு ஒரு சலுகை: ரூ. 5,290-க்கு டபிள் டோர் கோத்ரெஜ் ஃப்ரிட்ஜ், பிளிப்கார்டில் கூல் ஆஃபர் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR