இந்தியளவில் சுமார் 32 கோடிப் பேர் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளதாகத் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.


இந்நிலையில், போலி வாக்களார்களை கண்டறிய வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்னை அவர்களது வாக்காள் அட்டையுடன் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்படி இதுவரை சுமார் 32 கோடி போர் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் (Association for Democratic Reforms) என்னும் அரசுசாரா அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தகவல் குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.


மேலும், உச்சநீதிமன்ற அனுமதிக்கு பிறகு மேற்கொண்டு 54 கோடியே 50 லட்சம் வாக்காளர்களின் ஆதார் எண்ணும், அவர்களது வாக்காளர் அட்டை எண்னுடன் இணைக்கப்படும் எனக் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த 32 கோடி எண்ணிக்கையிலான இலக்கினை கிட்டதட்ட 3 மாத காலத்தில் முடித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!