IQOO Z6 44W


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IQOO ஸ்மார்ட்போன் அனைத்து பெரிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் போட்டியாக உருவெடுத்துள்ளது. அண்மையில் வெளியான இந்த ஸ்மார்ட்போன், மூன்று அல்ட்ரா கேமிங் முறைகள் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 680 புதிய 6nm செயல்முறையை ஏற்று ஆக்டா-கோர் வடிவமைப்புடன் வருவதால், CPU செயல்திறன் அதிகரித்துள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. FHD+ AMOLED டிஸ்ப்ளே திரை (6.44 இன்ச்) பொருத்தப்பட்டுள்ளது. 2400 x 1080 தெளிவுத்திறனில் நீங்கள் எவ்வளவு வேகமாகப் படமெடுத்தாலும் கிளியராக இருக்கும். 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கும். கேம் விளையாடுவதற்கு நல்ல தேர்வாகும். 


மேலும் படிக்க | Infinix Note 12 5G: பிளிப்கார்ட்டில் ரூ.499-க்கு விற்பனை


Realme Narzo 50


ரியல் மீ நசரோ ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 2412 x 1080 ரெசல்யூஷன் FHD+, 6.6 இன்ச் ஸ்க்ரீன் 90.8% உடன் அதிக செயல்திறன் மற்றும் டிஸ்பிளேவுன் மார்க்கெட்டுக்குள் நுழைந்திருக்கிறது. 50MP AI கேமரா மற்றும் 2MP மேக்ரோ + 2MP B/W லென்ஸ் மற்றும் 16MP இன்-டிஸ்ப்ளே முன்பக்கக் கேமராவின் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உடன் வந்திருக்கிறது. ஸ்லோ-மோஷன், டைம்-லாப்ஸ், டூயல்-வியூ போன்ற அனைத்தையும் ஆதரிக்கும் ட்ரிபிள் ரியர் கேமரா இதன் ஸ்பெஷல்.


OPPO K10


ஒப்போவின் K சீரிஸ் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்க்ராட்ச் ரெசிஸ்டண்ட் ஃபோன் மிகப்பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிபியு மற்றும் பெரிய 6.59 இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கிறது. 50 எம்பி மெயின் + 2எம்பி மேக்ரோ இருக்கிறது. 6ஜிபி மற்றும் 128ஜிபி ரேம் மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பெற்றிருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ColorOS 11.1ல் செயல்படும். 



ரெட்மி நோட் 11


Redmi நோட் 11, 90Hz FHD+ AMOLED டிஸ்ப்ளே 6.43 இன்ச் அளவு கொண்டிருக்கும். 4GB RAM மற்றும் 64GB சேமிப்பகத்துடன் 6nm கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட Qualcomm Snapdragon 680 உடன் சிறந்த ஆற்றலை தரும். 33W ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியுடன் நீண்ட பேட்டரி ஆயுளைப் பெறுவீர்கள். 50எம்பி முதன்மை கேமரா, 8எம்பி அல்ட்ரா-வைட், 2எம்பி மேக்ரோ மற்றும் 2எம்பி டெப்த் ஆகியவற்றின் குவாட் கேமரா அமைப்புடன் வருவதால் நெகிழ்வான தருணங்களை சூப்பராக படமெடுக்கலாம். 


Samsung Galaxy M32


சாம்சங் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கேலக்ஸி M32 பெரும் வரவேற்பை பெற்ற போன்களில் ஒன்று. FHD+ sAMOLED 90Hz டிஸ்ப்ளே உடன் வருகிறது. 6000mAh பேட்டரியால் இயக்கப்படுகிறது. 64MP பிரதான கேமரா + 8MP அல்ட்ரா-வைட் + 2MP மேக்ரோ + 2MP குவாட்-ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. MediaTek G80 செயலி மற்றும் 4 + 64GB RAM மற்றும் ROM உடன் 1TB வரை விரிவாக்கக்கூடிய உயர் செயல்திறனை அனுபவிக்கலாம்.


மேலும் படிக்க | iPhone 12-ல் சலுகை மழை: பிளிப்கார்ட் சேலில் நம்ப முடியாத தள்ளுபடிகள்


இவை தரவரிசைக் கிடையாது, உங்களுக்கு விருப்பமான ஸ்மார்போனை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR