Infinix Note 12 5G: பிளிப்கார்ட்டில் ரூ.499-க்கு விற்பனை

அறிமுக சலுகையாக Infinix Note 12 5G ஸ்மார்ட்போனை காஷ்பேக் ஆஃபர் மற்றும் தள்ளுபடிகளுடன் சேர்த்து வெறும் 499 ரூபாய்க்கு வாங்கலாம்  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 15, 2022, 05:38 PM IST
  • பிளிப்கார்ட்டில் மெகா ஆஃபர்
  • 5 ஜி ஸ்மார்ட்போனுக்கு பம்பர் தள்ளுபடி
  • வெறும் ரூ.499-க்கு வாங்கலாம்
Infinix Note 12 5G: பிளிப்கார்ட்டில் ரூ.499-க்கு விற்பனை title=

Infinix Note 12 5G: இன்பினிக்ஸ் நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் காஷ்பேக் ஆஃபர்களுடன் மார்க்கெட்டில் அறிமுகமாகியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டில் இப்போதே வாங்கலாம். அனைத்து சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும்பட்சத்தில் வெறும் 499 ரூபாய்க்கு நீங்கள் ஸ்மார்ட்போனை வாங்கலாம். 

Infinix Note 12 5G தள்ளுபடி

Infinix நிறுவனம் லேட்டஸ்டாக 5G ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Infinix Note 12 5G என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு Flipkart-ல் விற்பனைக்குக் கிடைக்கிறது. ​​எந்த வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டையும் பயன்படுத்தி வாங்கினாலும் ரூ.500 தள்ளுபடி கிடைக்கும். ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தினால், ரூ.1500 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். இந்த தள்ளுபடிகள் கிடைத்தால் உங்கள் புதிய 5 ஜி ஸ்மார்ட்போனை ரூ.12,999-க்கு வாங்கலாம். 

மேலும் படிக்க | Amazon Best Phone Offer:ரூ.10,000-க்கும் குறைவான விலையில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்

ரூ.499-க்கு வாங்குவது எப்படி? 

எக்ஸ்சேஞ்ச் சலுகையை முழுமையாக பயன்படுத்தினால் வெறும் 499 ரூபாய்க்கு நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்கலாம். அதற்கு நீங்கள் உங்களின் பழைய ஸ்மார்ட்போனை கொடுக்க வேண்டும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட்போனை வாங்கினால் அதிகபட்சம் ரூ.12,500 வரை தள்ளுபடி கொடுக்கப்படும். முழு எக்ஸ்சேஞ்ச் பலனும் உங்களுக்கு கிடைத்தால், வெறும் 499 ரூபாய்க்கு போனை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.

Infinix Note 12 5G-ன் அம்சங்கள்

Infinix Note 12 5G ஸ்மார்ட்போனில், உங்களுக்கு 6.7 இன்ச் முழு HD + AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. 5,000mAh பேட்டரி கொண்ட இந்த 5G போனில், 33W டைப்-சி சார்ஜிங் ஆதரவையும் பெறுகிறீர்கள். கேமராவைப் பொறுத்தவரை, 50MP மெயின் சென்சார், 2MP டெப்த் லென்ஸ் மற்றும் AI லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 16MP-யில் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் சிம் கார்டு ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன், Mediatek Dimensity 810 5G செயலியில் இயங்கும்.

மேலும் படிக்க | ரீசார்ஜ் ப்ளான்கள் ஒப்பீடு: வோடாஃபோனா இல்லை ஜியோவா: இது ரூ 299 ப்ரீபெய்ட் ஒப்பீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News