மொழி, வழி தெரியாத இடங்களில் சுற்றுலா செல்லும் பலருக்கு துணையாக இருப்பது Google Maps தான்; ஆனால் இந்த Google Maps-யை நம்ப வேண்டாம் என கோவா இளைஞர்கள் விமர்சித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முக்கிய சுற்றலா தளங்களில் ஒன்றான கோவா-வில் இருக்கும் பாகா கடற்கறை செல்லும் வழி முனைக்கு முன்பாக வைக்கப்பட்ட பதாகை ஒன்று தான் இந்த தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம். அப்படி என்ன இருக்கின்றது இந்த பதாகையில்?...


ஆங்கிலத்தில் 'You are fooled by Google Maps. This road doesn’t take you to Baga Beach!!! Turn back and take a left turn, Baga is 1 km from here' என அச்சிடப்பட்டிருக்கும் இந்த பதாகை அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிப்பதாவது... "Google Maps உங்களை முட்டாளாக்கி கொண்டு இருக்கிறது. இந்த சாலை உங்களை பாகா கடற்கரைக்கு கொண்டு செல்லாது, இடப்பக்கம் திரும்பி 1 கிலோ மீட்டர் சென்றால், அவ்வழியே பாகா கடற்கரை வரும்" என எச்சரித்துள்ளது.



சமீப காலமாக Google Maps மீதான புகார்கள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. வழி இல்லா தடங்களின் திரும்புக என வாகன ஓட்டிகளை எச்சரிப்பதும், சாதாரன வழியை விட்டு வேறெங்கோ கூட்டி சென்று முகவரி இல்லா இடத்தில் தவிக்க விடுவதும் Google Maps-ல் தற்போது வழக்கமாகி விட்டது. 


இந்நிலையில் கோவா-விற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது சுற்றுலாவை Google Maps-யை நம்பி கெடுத்துக்கொள்ள வேண்டாம் என அப்பகுதி இளைஞர்கள் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர். இந்த புகைப்படமானது இணையத்தில் பரவி சில மணி நேரங்களிலேயே பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.