Flipkart Offer: 40 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.2,499-க்கு விற்பனை
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையில் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் 2,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Flipkart Big Billion Days 2022: Flipkart-ல் Big Billion Days விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 30ம் தேதி வரை நடக்கிறது. விற்பனையின் போது, ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் மீது பெரும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் குறைவான பட்ஜெட்டில் ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டு இருந்தால் சரியான வாய்ப்பு. ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள தாம்சன் 9ஏ சீரிஸ் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.2,499க்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
Thomson 9A Series 40 inch Smart TV சலுகைகள்
தாம்சன் 9ஏ சீரிஸ் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.21,499. ஆனால் பிளிப்கார்ட்டில் ரூ.14,999-க்கு கிடைக்கிறது. 30% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளன. இதன் காரணமாக ஸ்மார்ட் டிவயின் விலை மேலும் கணிசமாக குறையும்.
மேலும் படிக்க | iPhone 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி
Thomson 9A Series 40 inch Smart TV வங்கி சலுகை
தாம்சன் 9ஏ சீரிஸ் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க ஐசிஐசிஐ வங்கி அல்லது ஆக்சிஸ் வங்கி கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட் டிவியின் விலையை மேலும் குறையும்.
Flipkart; ஸ்மார்ட் டிவி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
தாம்சன் 9ஏ சீரிஸ் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. நீங்கள் பழைய டிவியை மாற்றினால், உங்களுக்கு புதிய டிவி வாங்கும்போது இந்த சலுகை கிடைக்கும். ஆனால் ஸ்மார்டிவியின் கண்டிஷன் நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.11 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை முழுமையாக கிடைத்தால் வெறும் ரூ.2,499-க்கு டிவியை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ