ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி!! ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நாளை தொடங்கவுள்ளது. எனினும் Flipkart Plus உறுப்பினர்களுக்கு இந்த விற்பனை தொடங்கிவிட்டது. வாடிக்கையாளர்கள் இங்கிருந்து பல விதமான பொருட்களை மிக மலிவாக ஷாப்பிங் செய்யலாம். நீங்களும் புதிய போன் வாங்க திட்டமிட்டிருந்தால், நீங்கள் ஒரு சாம்சங் போன் அபிமானியாக, ரசிகராக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஏனெனில் Samsung Galaxy F13 ஐ அதன் அசல் விலையான 14,999 ரூபாய்க்கு பதிலாக வெறும் 8,499 ரூபாய்க்கு இப்போது வாங்க முடியும். இந்த போனின் மிக முக்கியமான விஷயம் அதன் 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் 6.6 இன்ச் FHD + டிஸ்ப்ளே ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy F13 போன், 6.6 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது உங்கள் திரையை வெள்ளித் திரையாக மாற்றும். கண்ணாடி பாதுகாப்பிற்காக (கிளாஸ் ப்டொடெக்‌ஷன்), அதன் திரை கொரில்லா கிளாஸ் 5 இன் பாதுகாப்புடன் வருகிறது. இதனால் தொலைபேசியில் ட்ராப் மற்றும் ஸ்க்ராட்ச் (கீறல்கள்) மார்குகள் இருக்காது.


சிறந்த இணைப்பிற்கு, இது தானியங்கு தரவு மாறுதல் (டேடா ஸ்விட்சிங்) பயன்முறையைப் பெறுகிறது. இது இந்த பிரிவின் தொலைபேசியில் முதல் முறையாக வழங்கப்படுகிறது. இந்த போனில் 8 ஜிபி வரையிலான ரேம் கிடைக்கிறது.


மேலும் படிக்க | iPhone 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி 


ஸ்மார்ட்போனில் Exynos 850 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது 4GB வரையிலான ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரேம் 8 ஜிபி வரை விரிவாக்கப்படலாம். இந்த போன் வாட்டர்ஃபால் ப்ளூ, சன்ரைஸ் காப்பர் மற்றும் நைட்ஸ்கி கிரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.


6000mAh பேட்டரி கிடைக்கும்


பவருக்கு ஃபோனில் 6000mAh பேட்டரி உள்ளது. இது 15W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. Galaxy F13 அடாப்டிவ் பவர் சேமிப்பு மற்றும் AI பவர் மேனேஜ்மென்ட்டை ஆதரிப்பதாக சாம்சங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


சாம்சங் கேலக்ஸி F13 இல் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா கிடைக்கிறது. இதில் 5 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ், 50 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளன. செல்ஃபி எடுக்க, இந்த ஃபோனில் 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது.


மேலும் படிக்க | Flipkart Big Billion Days:டாப் OPPO 5G போன்களில் ரூ.15,000 தள்ளுபடி, அதிரடி சலுகை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ