Flipkart Big Savings Days Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் தற்போது ‘பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல்’ நடந்து வருகிறது. இதில் பல விதமான, பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களில் நல்ல சலுகைகள் கிடைக்கின்றன. இந்த பதிவில்  மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ 5ஜி ஸ்மார்போனில் கிடைக்கும் சலுகைகள் பற்றி காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Motorola Edge 50 Neo 5G: இந்த ஆண்டு 2025ல் புதிய ஃபோனை வாங்க திட்டமிட்டிருந்தால், பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் சேல் உங்களுக்கு மிகவும் சிறந்த வாய்ப்பாக இருக்கும். மோட்டோரோலாவின் இந்த பிராண்டட், தரமான போனை இந்த சேலில் மிக குறைந்த விலையில் வாங்கலாம். 


பிளிப்கார்டின் இந்த சேலில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஜனவரி 5 வரை நடைபெறும் இந்த விற்பனையில் வாடிக்கையாளர்கள் இதை வாங்க முடியும். இந்த போன் 50 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இது பல தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் கிடைக்கின்றன. 


Motorola Edge 50 Neo 5G: விலை மற்றும் சலுகைகள்


Motorola Edge 50 Neo 5G ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.29,999. பிளிப்கார்ட்டில் இதில் 30 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். இந்த தள்ளுபடிக்குப் பிறகு, இந்த ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ. 20,999 -க்கு வாங்கலாம். இந்த வகையில் இந்த போனை வாங்கும்போது, ​​ரூ.9.000 -ஐ மிக எளிதாகச் சேமிக்கலாம்.


இது மட்டுமின்றி, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் Flipkart Axis Bank கிரெடிட் கார்டில் 5% கேஷ்பேக் பெறலாம். இது தவிர, இதை வாங்கும் போது ரூ. 20300 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அதாவது பரிமாற்ற சலுகையும் கிடைக்கின்றது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை நீங்கள் மேலும் குறைக்க முடியும். இது தவிர, இதை வாங்க நோ-காஸ்ட் EMI வசதியும் இதில் கிடைக்கின்றது.


மேலும் படிக்க | iPhone 16E .... விரைவில் வருகிறது ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன்... லேடஸ்ட் அப்டேட் இதோ


Moto Edge 50 Neo 5G: அம்சங்கள் விவரம்


இந்த போன் 6.4 இன்ச் LTPO டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 120Hz புதுப்பிப்பு வீதம் உள்ளது. இது MediaTek Dimensity 7300 SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும், டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மூலம் இது பாதுகாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி/512ஜிபி சேமிப்பு வகைகளில் வருகிறது.


கேமரா மற்றும் பேட்டரி


கேமரா மற்றும் பேட்டரி கேமரா அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 50MP OIS-சப்போர்டட் முதன்மை கேமராவுடன் வருகிறது. இதில் 13 எம்பி பின்புற கேமரா மற்றும் 10 எம்பி முன் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்க 32எம்பி கேமரா உள்ளது. இணைப்பு வசதிக்காக இந்த ஸ்மார்ட்போனில், இரட்டை சிம் ஸ்லாட்டுகள், வைஃபை, புளூடூத் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன. இது 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4310mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | வாடிக்கையாளருக்கு குட் நியூஸ்.. 75 நகரங்களில் 5ஜி மொபைல் சேவை தொடங்கும் வோடபோன் ஐடியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ