Flipkart Grand Gadget Days: இ-காமர்ஸ் இணையதளமான ஃபிளிப்கார்ட்டில் டிசம்பர் 24 முதல்  கிராண்ட் கேஜெட் டேஸ் விற்பனையானது (Flipkart Grand Gadget Days Sale) தொடங்கியுள்ளது. இதில் இயர்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற அனைத்து எலக்ட்ரானிக் கேஜெட்டுகளுக்கும் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விற்பனையில், ஹெச்பி லேப்டாப்களில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இங்கு, 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாப்டாப்பை வாடிக்கையாளர்கள் வெறும் 19 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முடியும். 


HP லேப்டாப்களில் பெரும் தள்ளுபடி


சந்தையில் HP லேப்டாப்பின் விலை ரூ.46,055 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் (Flipkart) விற்பனையில் இந்த லேப்டாப் 15% தள்ளுபடிக்கு பிறகு ரூ.38,990-க்கு விற்கப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இந்த லேப்டாப்பை வாங்கினால், 10%, அதாவது ரூ.1,500 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இது லேப்டாப்பின் விலையை ரூ.37,490 ஆகக் குறையும். 


ALSO READ | Flipkart Sale, ஸ்மார்ட்போனில் பிரமிக்க வைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள்


19 ஆயிரம் ரூபாய்க்கு லாப்டாப்பை எப்படி வாங்குவது?


இந்த டீலில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய லேப்டாப்பிற்கு பதிலாக இந்த லேப்டாப்பை வாங்கினால், ரூ.18,100 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களால் பெற முடிந்தால், இந்த அசத்தலான லேப்டாப்பை அதன் அசல் விலையான ரூ.37,490-க்கு பதிலாக, வெறும் ரூ.19,390-க்கு வாங்கலாம். 


இந்த லாப்டாப்பின் சிறப்பம்சம் என்ன?


HP Ryzen 3 Dual Core Thin and Light Laptop பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாகவும், மிகவும் இலகுவாகவும் உள்ளது. இந்த லேப்டாப் 15.6-இன்ச் ஃபுல் எச்டி ஆன்டி-க்ளேர் டிஸ்ப்ளே மற்றும் 1920 x 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. Ryzen 3 டூயல் கோர் செயலியில் வேலை செய்யும் இந்த லேப்டாப்பில் (Laptop), 8GB RAM மற்றும் 256GB SSD கிடைக்கும். உள்ளமைக்கப்பட்ட இரட்டை ஸ்பீக்கர்களுடன் கூடிய இந்த லேப்டாப்பில் நல்ல பேட்டரி லைஃபும் உள்ளது. இந்த லேப்டாப் ஒரு வருட ஆன்சைட் வாரண்டி மற்றும் ஒரு வருட உள்நாட்டு வாரண்டியுடன் வருகிறது.


ALSO READ | Flipkart Sale: இந்த டாப் கிளாஸ் ஸ்மார்ட்வாட்ச்சில் பம்பர் 60% வரை தள்ளுபடி 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR