Flipkart Sale: இந்த டாப் கிளாஸ் ஸ்மார்ட்வாட்ச்சில் பம்பர் 60% வரை தள்ளுபடி

ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) டிசம்பர் 24 முதல் Grand Gadget Days விற்பனை தொடங்கியது, இந்த விற்பனை டிசம்பர் 29 வரை இயங்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 28, 2021, 10:11 AM IST
Flipkart Sale: இந்த டாப் கிளாஸ் ஸ்மார்ட்வாட்ச்சில் பம்பர் 60% வரை தள்ளுபடி title=

புதுடெல்லி: ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) டிசம்பர் 24 முதல் Grand Gadget Days விற்பனை நடந்து வருகிறது, இதில் லேப்டாப்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், இயர்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற பல பொருட்களுக்கு அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இன்று நாம் Noise ஸ்மார்ட்வாட்ச்சில் கிடைக்கும் ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி காண உள்ளோம். இந்த சாதனத்தில் நீங்கள் 60% தள்ளுபடி பெறலாம். இந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொள்வோம்.

Noise Smartwatches மீது 60% வரை தள்ளுபடி
Noise ColorFit Qube SpO2 Smartwatch இன் ஓரிஜினல் விலை ரூ.4,999 ஆகும். Flipkart இன் Grand Gadget Days விற்பனையில் 60% தள்ளுபடியில் இந்த Smartwatch விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 4,999 ரூபாய்க்கு பதிலாக இந்த Smartwatch ஐ 1,999 ரூபாய்க்கு வாங்கலாம்.

ALSO READ: தள்ளுபடி ஓ தள்ளுபடி; 6,999 ரூபாய்க்கு LED TV 

வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Flipkart இன் Grand Gadget Days விற்பனையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒப்பந்தத்தில், வங்கிச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வங்கி சலுகையின் உதவியுடன், நீங்கள் கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். Flipkart இல் Axis Bank கிரெடிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட்வாட்சை நீங்கள் செலுத்தினால், உங்களுக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும், அதாவது ரூ.100, அதன்பின் இதன் விலை ரூ.1,999ல் இருந்து ரூ.1,899 ஆக குறையும்.

Noise ColorFit Qube SpO2 Smartwatch அம்சங்கள்
Noise ColorFit Qube SpO2 Smartwatch 1.4-இன்ச் முழு டச் HD டிஸ்ப்ளே, பல கிளவுட்-அடிப்படையிலான வாட்ச் முகங்கள், 24 மணிநேர இதய துடிப்பு கண்காணிப்பு, SpO2 கண்காணிப்பு மற்றும் பல விளையாட்டு முறைகளுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் IP68 மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. Noise வழங்கும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் பேட்டரி ஆயுளைப் பற்றி பேசுகையில், இது ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் ஒரு வாரம் முழுவதும் நீடிக்கும். இதில் நீங்கள் இன்னும் பல அம்சங்களைப் பெறுவீர்கள்.

Flipkart இன் இந்த Grand Gadget Days விற்பனை டிசம்பர் 24 அன்று தொடங்கியது மற்றும் Flipkart இன் இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் டிசம்பர் 29 வரை நேரலையில் இருக்கும்.

ALSO READ:இந்த தீபாவளிக்கு 60,000 ரூபாய்க்குள் Flipkart இல் வாங்கக்கூடிய சிறந்த 65 இன்ச் டிவி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News