Flipkart Offer! Vivo 5G ஸ்மார்ட்போனை வெறும் ரூ.990க்கு வாங்குங்கள்
Vivo சில நாட்களுக்கு முன்பு Vivo T1 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.
புதுடெல்லி: பிளிப்கார்ட் மொபைல் போனான்சா விற்பனையின் கடைசி நாள் இன்று. இன்று காதலர் தினம் முன்னிட்டு உன்களுக்கு பிடித்தவருக்கு சிறப்பு ஸ்மார்ட்போனை பரிசளிக்க விரும்பினால், இந்த விற்பனை உங்களுக்குப் பயன்படும். ஏனெனில் இந்த விற்பனையில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மிகவும் மலிவாக வாங்க முடியும். விவோ சில நாட்களுக்கு முன்பு விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இன்று இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி பிளிப்கார்ட் விற்பனையின் போது இந்த போனை வெறும் 990 ரூபாய்க்கு வாங்கலாம். எப்படி என்று சொல்லலாம்...
பிளிப்கார்ட் மொபைல் போனான்சா விற்பனை: விவோ டி1 5ஜி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
விவோ டி1 5ஜி 4ஜிபி ரோம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாறுபாட்டின் ஓரிஜினல் விலை ரூ.19,990 ஆகும். ஆனால் பிளிப்கார்ட் விற்பனையில் இந்த போனை ரூ.15,990க்கு வாங்கலாம். அதாவது போனில் 4 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன, இதன் காரணமாக தொலைபேசியின் விலை இன்னுமும் குறைகிறது.
மேலும் படிக்க | இந்த எண் உங்கள் பாஸ்வேர்டில் இருக்கிறதா? ஹேக்கர்களின் பிடியில் நீங்கள்
பிளிப்கார்ட் மொபைல் போனான்சா விற்பனை: விவோ டி1 5ஜி எக்ஸ்சேஞ்ச் சலுகை
விவோ டி1 5ஜி இல் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃப் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த மெகா தள்ளுபடி பெறலாம். ஆனால் போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.15,00 தள்ளுபடி கிடைக்கும். நீங்கள் முழு ஆஃப்ரை பெற முடிந்தால், போனின் விலை ரூ.990 ஆக ஆகும்.
பிளிப்கார்ட் மொபைல் போனான்சா விற்பனை: விவோ டி1 5ஜி வங்கி சலுகை
உங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றவில்லை என்றால், வங்கிச் சலுகையும் உள்ளது, இது போனின் விலையைக் குறைக்கும். எச்டிஎப்சி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், உடனடி தள்ளுபடியாக ரூ.1000 கிடைக்கும்.
விவோ டி1 5ஜி விவரக்குறிப்புகள்
விவோ டி1 5ஜி ஆனது 2408 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.58-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி முழு-எச்டி+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதன் நடுவில் பஞ்ச் ஹோல் கட்அவுட் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்தையும் 240Hz மாதிரி வீதத்தையும் கொண்டுள்ளது. விவோ டி1 5ஜி ஆனது 2.2GHz வேகத்தில் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட்டைக் கொண்டுள்ளது. தொலைபேசியின் மென்பொருள் பக்கத்தில், இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12 இல் இயங்குகிறது.
மேலும் படிக்க | தள்ளுபடி விலையில் ஐபோன் 12! இன்றே முந்துங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR