Electric Car: உங்கள் மின்சார காரின் வரம்பு குறையாமல் இருக்க உதவும் சூப்பர் டிப்ஸ்
மின்சார கார்களின் வரம்பை பராமரிப்பது முக்கியம். நாம் செய்யும் சில தவறுகளால், மின்சார வாகனங்களின் வரம்பு குறைந்து விடலாம்.
Electric Cars Range Tips: இந்தியாவில் மின்சார கார்களின் புகழும் பயன்பாடும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் பல நிறுவனங்களின் மின்சார நான்கு சக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கி உள்ளன.
மின்சார கார்களின் வரம்பை பராமரிப்பது முக்கியம். இருப்பினும், நாம் செய்யும் சில தவறுகளால், மின்சார வாகனங்களின் வரம்பு குறைந்து விடலாம். இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில முக்கிய குறிப்புகளை பின்பற்றினால், உங்கள் மின்சார கார்கள் மிகச்சிறந்த வரம்பை அளிக்கும், அவற்றின் பேட்டரி ஆயுளும் அதிகரிக்கும்.
டீப் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டாம்
- மின்சார வாகனத்தை (Electric Vehicles) டீப் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டாம், அது பேட்டரியை பாதிக்கிறது.
- இப்படி செய்தால், வாகனத்தின் வரம்பு தானாக குறைகிறது.
- 20 சதவீதம் பேட்டரி மிச்சமிருக்கும் முன் எப்போதும் சார்ஜ் செய்யுங்கள்.
காரணமின்றி உங்கள் மின்சார காரின் வேகத்தை அதிகரிக்க வேண்டாம்
- வேகத்தை தேவை இன்றி அதிகரிப்பதால், மின்சார காரின் பேட்டரி மிக வேகமாக வெளியேறத் தொடங்குகிறது.
- காருக்கு தேவைப்படும் போது மட்டுமே கூடுதல் வேகத்தில் அதை இயக்க வேண்டும்.
ALSO READ:Cheapest Electric Scooters: மின்சார வாகன சந்தையில் களமிறங்குகிறது Darwin
வாகனத்தில் அதிக சுமைகளை ஏற்றுவதைத் தவிர்க்கவும்
- மின்சார வாகனங்களில் அதிக சுமை போட்டால், அது வாகனத்தின் செயல்திறனை பாதிக்கும்.
- வாகனத்தில் அதிக சுமை போட்டால், மோட்டார் மீது அது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் மோட்டார் வேலை செய்ய அதிக ஆற்றல் தேவைப்படும். இதனால் மின்சார வாகனத்தின் ரேஞ் பாதிக்கப்படுகின்றது.
இவற்றை மனதில் கொள்ளுங்கள்
ஒவ்வொரு இரண்டாவது அல்லது மூன்றாவது வாரமும் ஒரு நிபுணரிடம் மின்சார காரைக் காட்டி ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என சரி பார்த்துக்கொள்ளுங்கள். மின்சார காரின் (Electric Car) வல்லுநர் அதில் உள்ள ஒவ்வொரு சிறிய பிரச்சனையையும் புரிந்துகொண்டு அதை சரி செய்கிறார். இது காரின் வரம்பை அதிகரிப்பதோடு, பேட்டரியும் நீண்ட நேரம் நன்றாக வேலை செய்கிறது.
ALSO READ:Ola EVக்கு போட்டியாக களமிறங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR