Ola EVக்கு போட்டியாக களமிறங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Bounce Electric நிறுவனம், புத்தம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Infinity ஐ டிசம்பர் 2 ஆம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2021, 02:33 PM IST
Ola EVக்கு போட்டியாக களமிறங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் title=

புதுடெல்லி: எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர் Bounce நிறுவனம், இன்பினிட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்த EVக்கான முன்பதிவும் அறிமுகம் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த ஆண்டு முதல் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கவுள்ளது.

ஓலாவைப் (Ola) போலவே, பவுன்ஸ் Electric vehicle ஆனது ரூ 499 டோக்கன் தொகையுடன் இ-ஸ்கூட்டர் முன்பதிவுகளைத் திறக்கும். Bounce Infinity ஸ்கூட்டரில் ஸ்மார்ட், கழற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இந்த ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை கழற்றி, வசதிக்கேற்ப சார்ஜ் செய்துகொள்ளலாம்.

ALSO READ:Ola அதிரடி: மின்சார பைக்குகள் மற்றும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்கள் விரைவில் அறிமுகம் 

பேட்டரி இல்லாமலும் ஸ்கூட்டர் வாங்கலாம்
Bounce EV புதிய ஸ்கூட்டரில் ஒரு தனித்துவமான 'Battery As A Service' விருப்பத்தையும் வழங்குகிறது, அதன்படி ஸ்கூட்டரை பேட்டரி இல்லாமல் வாங்க முடியும். இதற்குப் பிறகு, வாடிக்கையாளர்கள் போனஸின் பேட்டரி-ஸ்வாப்பிங் நெட்வொர்க்கின் உதவியுடன் கட்டணத்தை டெபாசிட் செய்யலாம் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை முழு சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி ஸ்கூட்டருடன் மாற்றலாம். இந்த விருப்பத்தின் மூலம், பேட்டரியுடன் கூடிய ஸ்கூட்டரை விட 40% குறைவான செலவில் பேட்டரி இல்லாத ஸ்கூட்டராக வாங்கலாம்.

EV பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை
புதிய Infinity EV பற்றி நிறுவனம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வழங்கவில்லை. இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டில், சுமார் 52 கோடி ரூபாய்க்கு 100% 22மோட்டார்களை வாங்கியதாக பவுன்ஸ் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் ராஜஸ்தானில் உள்ள 22 மோட்டார்ஸ் பிவாடி ஆலை மற்றும் அங்குள்ள சொத்தின் மீது உரிமையைப் பெற்றுள்ளார். இந்த ஆலை ஆண்டுக்கு 1,80,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும். இது தவிர, தென்னிந்தியாவில் புதிய ஆலை தொடங்குவதற்கான கொள்கையையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

ALSO READ:Maruti Suzuki அளிக்கும் சூப்பர் செய்தி: இனி அதிக சி.என்.ஜி கார்களை எதிர்பார்க்கலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News