Airtel எண் கொண்டு இலவசமாக Amazon Prime ஆக்டிவேட் செய்வது எப்படி?
சமீபத்தில் அமேசானுடன் கூட்டு சேர்ந்துள்ள ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் அமேசான் பிரைம்-கான இலவச உறுப்பினர் சந்தாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் அமேசானுடன் கூட்டு சேர்ந்துள்ள ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் அமேசான் பிரைம்-கான இலவச உறுப்பினர் சந்தாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் நெட்ஃபிக்ஸ் இலவச சந்தாவை வழங்கியது. ஆனால் இப்போது, அமேசான் பிரைம், ZEE5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்டீம் நன்மைகளை மட்டுமே வழங்குகிறது.
அந்த வகையில் தற்போது, நிறுவனம் தனது அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அமேசான் பிரைம் சந்தாவை வழங்கி வருகிறது. இதன் படி ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் விலை ரூ.499, ரூ.749, ரூ.999, மற்றும் ரூ.1,599 ஆகியவற்றுடன் பயனர்கள் இந்த சலுகையினை பெறலாம்.
அமேசான் பிரைம் சந்தா அனைத்து அசல் உள்ளடக்கம், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பல மொழிகளில் உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. எனவே, அமேசான் பிரைம், ZEE5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றிலிருந்து உள்ளடக்கத்தை வழங்கும் திட்டங்களை கூடுதல் இணைப்பாக அளிக்கும் ஏர்டெல் திட்டங்கள் தற்போதைய முழு அடைப்பு காலத்தில் ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.
அமேசான் பிரைம் சந்தாவை இலவசமாக வழங்கும் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்:
முதல் திட்டத்தின் விலை ரூ.499, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற இலவச அழைப்பு, 75GB தரவு மற்றும் 100 SMS கிடைக்கிறது. மற்றும் இந்த மூன்று OTT இயங்குதளங்களிலிருந்து உள்ளடக்கத்துடன் கைபேசி பாதுகாப்பை வழங்கும் ஏர்டெல் நன்றி நன்மைகளையும் அளிக்கிறது.
இரண்டாவது திட்டத்தின் விலை ரூ.749, ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைமின் சந்தாவுடன் 125GB தரவையும் அளிக்கிறது. இதில் இரண்டு கூடுதல் இணைப்புகள் உள்ளன.
மூன்றாவது திட்டத்தின் விலை ரூ.999, இந்த திட்டத்தில் பயனர்கள் 150GB தரவு, நான்கு கூடுதல் இணைப்பு (மூன்று வழக்கமான மற்றும் ஒரு கூடுதல்), வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைமிற்கான அணுகல் ஆகியவற்றைப் பெறுவார்கள்.
கடைசியாக ரூ.1,599 திட்டம், வரம்பற்ற 3G மற்றும் 4G தரவு, 200 நிமிட சர்வதேச அழைப்பு மற்றும் சர்வதேச பொதிகளில் 10 சதவீதம் தள்ளுபடி. இத்துடன் அமேசான் ப்ரைம், ZEE5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றிலிருந்து உள்ளடக்கத்தையும் அனுக அனுமதி.
ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மூலம் இலவச அமேசான் பிரைம் சந்தாவை எவ்வாறு செயல்படுத்துவது?
படி 1: முதலில், நீங்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும், மேலும் இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
படி 2: அதன் பிறகு, உங்கள் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் டிவி பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
படி 3: பின்னர், நீங்கள் பயன்பாட்டில் உள்நுழைய வேண்டும், பின்னர் அமேசான் பிரைம் வீடியோ சந்தாவைக் காட்டும் பேனரைக் காண்பீர்கள்.
படி 4: பிறகு, நீங்கள் அந்த பேனரைக் கிளிக் செய்ய வேண்டும். சந்தாவைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் காண்பிக்கும் பாப்-அப் சாளரத்தைக் காண்பீர்கள். சேவைகளை செயல்படுத்த நீங்கள் அதனை கிளிக் செய்ய வேண்டும்.
படி 5: பின்னர், திறக்கப்படும் பக்கம் உங்களை Google Play Store-க்கு அழைத்துச் செல்லும், அதன் பிறகு, நீங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் செயலியின் உள்நுழைவதற்கு உங்கள் விவரங்களை நீங்கள் கொடுக்க வேண்டும், பின்னர், உங்கள் சேவை செயல்படுத்தப்படும்.
தற்போதைய இந்தியாவில் முழு அடைப்பு நடைமுறையில் உள்ள நிலையில் OTT தளங்களின் நுகர்வு அதிகரித்துள்ளது. உண்மையில், நாடு முழுவதும் முழு அடைப்பு அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, OTT பயன்பாடுகளிம் பயன்பாடு 82 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இதன் காரணமாக சில OTT நிறுவனங்கள் தங்கள் தளங்களின் இலவச உள்ளடகங்களை அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.