Flipkart Black Friday Sale: Vivo T3 Ultra போனில் அட்டகாசமான தள்ளுபடி, குஷியில் கஸ்டமர்ஸ்
Flipkart Black Friday Sale: மலிவான விலையில், அதிக திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு Vivo T3 Ultra சிறந்த தேர்வாக இருக்கும். 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்ட இந்த போன் Flipkart இன் பிளாக் ஃப்ரைடே விற்பனையில் சிறந்த தள்ளுபடியும் கிடைக்கிறது.
Flipkart Black Friday Sale: பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே விற்பனை நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கிவிட்டது. நாளை, அதாவது நவம்பர் 29 வரை இது லைவ் ஆக இருக்கும். பிளிப்கார்ட்டின் இந்த சேலில், பல வித பொருட்களில் அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுகின்றன. சிறந்த செல்ஃபி கேமரா கொண்ட ஃபோனை வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் இந்த சேலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மலிவான விலையில், அதிக திறன் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்களுக்கு Vivo T3 Ultra சிறந்த தேர்வாக இருக்கும். 50 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்ட இந்த போன் Flipkart இன் பிளாக் ஃப்ரைடே விற்பனையில் சிறந்த தள்ளுபடியும் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் வேரியண்டின் விலை ரூ.35,999. நவம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையில் ரூ.3,000 வரையிலான வங்கி தள்ளுபடியுடன் இதை வாங்கலாம்.
Flipkart Axis Bank Card
வாடிக்கையாளர்கள் Flipkart Axis Bank Card மூலம் போனை வாங்கினால், 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். இந்த போனில் ரூ.35,400 வரை பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் நிறுவனம் வழங்குகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கிடைக்கும் தள்ளுபடி உங்கள் பழைய ஃபோனின் நிலை, பிராண்ட் மற்றும் நிறுவனத்தின் பரிமாற்றக் கொள்கையைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்வது நல்லது.
மேலும் படிக்க | எச்சரிக்கை... ஸ்கிரீன் கார்டுகள் உங்கள் ஸ்மார்ட்போனை காலி செய்யலாம்
Vivo T3 Ultra: அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்
- விவோ நிறுவனம் இந்த போனில் 1260x2800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.78 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை வழங்குகிறது.
- போனில் வழங்கப்படும் இந்த டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது.
- இந்த டிஸ்ப்ளேயின் பீக் ப்ரைட்னஸ் 4500 நிட்ஸ் ஆகும்.
- ஃபோனில் 12ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 256ஜிபி வரை UFS 3.1 சேமிப்பகம் உள்ளது.
- நிறுவனம் இந்த போனில் Dimensity 9200+ சிப்செட்டை ப்ராசசராக வழங்குகிறது.
- புகைப்படம் எடுக்க, தொலைபேசியின் பின்புறத்தில் LED ப்ளாஷ் கொண்ட இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இதில் 50 மெகாபிக்சல் மெயின் லென்ஸுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஆங்கிள் சென்சார் ஒன்றையும் காணலாம்.
செல்ஃபி எடுக்க, இந்த தொலைபேசியில் ஆட்டோஃபோகஸுடன் 50 மெகாபிக்சல் முன் கேமராவை நிறுவனம் வழங்குகிறது. போனில் 5500mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 14 இல் தொலைபேசி வேலை செய்கிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் இந்த போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டையும் பெறும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ