உங்கள் பழைய ஸ்மார்ட்போனினால் நீங்கள் சிரமப்பட்டு, புதிய 5G ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இதுவே உங்களுக்கான சரியான வாய்ப்பு. ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலாவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் (ஜூன் 14)  மோட்டோ ஜி82 5ஜி விற்பனைக்குக் கிடைக்கும். 21,499 மதிப்பிலான இந்த ஸ்மார்ட்போனை பாதி விலைக்கும் குறைவான விலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இது உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 528 கி.மீ மைலேஜ் கொடுக்கும் கியா காரின் சிறப்பம்சங்கள்


Moto G82 5Gஐ மலிவாக வாங்குங்கள்!


மோட்டோரோலாவின் இந்த சமீபத்திய 5ஜி ஸ்மார்ட்போன், மோட்டோ ஜி82 5ஜி ரூ.21,499-க்கு பிளிப்கார்ட்டில் விற்பனைக்குக் கிடைக்கிறது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) கிரெடிட் கார்டை வாங்கும் போது பயன்படுத்தினால், உடனடியாக ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். இந்த வழியில், இந்த ஸ்மார்ட்போனின் விலை உங்களுக்கு ரூ.19,999 ஆக குறையும்.


பாதி விலைக்கும் குறைவாக வாங்கலாம்


நீங்கள் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை பாதி விலைக்கும் குறைவாக வாங்க விரும்பினால், எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் ரூ.12,500 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த போனின் விலை உங்களுக்கு 7,499 ரூபாய்க்கு கிடைக்கும். 


Moto G82 5G-ன் அம்சங்கள்


Moto G82 5G-ல், உங்களுக்கு 6.6-இன்ச் முழு HD + POLED (HD + poOLED) டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. 5,000mAh பேட்டரி கொண்ட இந்த 5G போனில், நீங்கள் 33W வயர்டு சார்ஜிங் ஆதரவையும் பெறுகிறீர்கள். Moto G82 5G-ல், 50MP பிரதான சென்சார், 8MP இரண்டாவது சென்சார் மற்றும் 2MP மூன்றாம் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த பின்புற கேமராவுடன் 16MP முன்பக்க கேமராவும் வழங்கப்படுகிறது. டூயல் சிம் ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். 


மேலும் படிக்க | Smartphone Hacking: ஹேக்கர்களை அழைப்பது நீங்கள் தான் - ஸ்மார்ட்போன் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR