புதுடெல்லி: ஸ்மார்ட்போன் இன்று அனைவரிடமும் உள்ளது. ஸ்மார்ட்போன் நன்றாக வேலை செய்ய, தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பணி மிகவும் முக்கியமானது. Jio, Airtel மற்றும் Vodafone Idea ஆகியவை நாட்டின் சிறந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களாகும், அவை தங்கள் பயனர்களுக்கு பல அற்புதமான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இன்று நாம் பேசுவது அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதிய சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதாவது பிஎஸ்என்எல் பற்றி. இதன் முழு விவரத்தை நாம் இங்கே காண்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BSNL இன் மிகவும் மலிவான ப்ரீபெய்ட் திட்டம்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் பயனர்களுக்கு பல ப்ரீபெய்ட் (Prepaid Plans) றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இன்று நாம் BSNL இன் அத்தகைய திட்டத்தைப் பற்றி பேசுகிறோம், இதன் விலை ரூ.36 மட்டுமே. பிஎஸ்என்எல் தனது பயனர்களுக்கு 40 ரூபாய்க்கும் குறைவான பலன்களை வழங்கி வருகிறது, இதில் டேட்டா, டாக் டைம் மற்றும் இலவச அழைப்பு, இந்த அனைத்து நன்மைகளும் அடங்கும்.


ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்


36 ரூபாயில் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்
பிஎஸ்என்எல்-ன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், ரூ.36 செலுத்தி பயனருக்கு ரூ.36 டாக் டைம் வழங்கப்படும். மேலும், பயனருக்கு இலவச வாய்ஸ் காலிங்க் அழைப்புக்கு 250 நிமிடங்கள் வழங்கப்படும், இதன் மூலம் நீங்கள் பிஎஸ்என்எல்-டு-பிஎஸ்என்எல் அழைப்புகளைச் செய்யலாம். இது மட்டுமின்றி, இந்த மலிவான திட்டத்தில் டேட்டா நன்மையும் சேர்க்கப்பட்டுள்ளது. நிறுவனத்திடமிருந்து 200MB டேட்டாவும் வழங்கப்படும். இலவச எஸ்எம்எஸ் வசதி இதில் வழங்கப்படவில்லை என்றாலும், ஐந்து பைசாவுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 15 நாட்கள் ஆகும். 


நீங்களும் BSNL சந்தாதாரராக இருந்தால், இந்த மலிவு மற்றும் பல நன்மைகள் ப்ரீபெய்ட் திட்டத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR