இரு சக்கர வாகனத் துறையின் பைக் பிரிவில் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும் மைலேஜ் பைக்குகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. இந்த மைலேஜ் கொண்ட பைக்குகளின் தற்போதைய வரம்பில், டிவிஎஸ் முதல் ஹீரோ மற்றும் ஹோண்டா முதல் பஜாஜ் வரை அதிக எண்ணிக்கையிலான பைக்குகள் உள்ளன. இதில் இன்று நாம் டிவிஎஸ் மோட்டார்ஸின் பிரபலமான பைக் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பற்றி பார்ப்போம். இது குறைந்த பட்ஜெட்டில் நீண்ட மைலேஜ் தரும் பைக் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பைக்கை ஷோரூமில் வாங்கினால், இதற்கு 70 ஆயிரம் முதல் 74 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டும். ஆனால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் சலுகைகள் மூலம் இந்த பைக்கை பாதி விலைக்கும் குறைவான பணத்தில் வாங்கலாம்.


இரு சக்கர வாகனமான TVS Star City Plus (டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+) பைக்கை சலுகை விலையில் வாங்க பல்வேறு ஆன்லைன் இணையதளங்களில் விவரங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அவற்றில் சிறந்த சலுகை மற்றும் குறைந்த விலையில் கிடைக்கும் பைக்களைப் பற்றியா விவரங்களை உங்களுக்குச் சொல்கிறோம்.


மேலும் படிக்க: விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பைக்குகள்


DROOM இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முதல் சலுகை:
இங்கு பட்டியலிடப்பட்டுள்ள பைக் 2016 மாடல் ஆகும். அதன் விலை ரூ. 22,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பைக் வாங்கும் போது உங்களுக்கு கடனுக்காக ஃபைனான்ஸ் உதவியும் கிடைக்கும்.


OLX இணையதளத்தில் இருந்து இரண்டாவது சலுகை:
இங்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ள பைக்கின் மாடல் 2015 ஆகும். அதன் விலை ரூ.23,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தளத்தில் நீங்கள் பைக் வாங்கினால் உங்களுக்கு ஃபைனான்ஸ் உதவி கிடைக்காது.


QUIKR இணையதளத்தில் மூன்றாவது சலுகை:
இங்கு விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ள பைக்கின் மாடல் 2019 ஆகும். இந்த தளத்தில் இந்த வாகனத்தின் விலை ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இந்த டிப்ஸ் உதவும், பணமும் பெட்ரோலும் மிச்சமாகும்


பைக்கின் இன்ஜின் முதல் மைலேஜ் விவரங்கள்:
TVS Star City Plus-ல் கிடைக்கும் சலுகைகள் குறித்த முழு விவரங்களைப் படித்த பிறகு, இந்த பைக்கை நீங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த பைக்கின் இன்ஜின் முதல் மைலேஜ் வரையிலான முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.


டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பைக்கின் இன்ஜின் மற்றும் பவர் பற்றி பேசினால், இதில் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 8.19 பிஎஸ் பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினுடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


பைக்கின் மைலேஜ் குறித்து பேசினால், இந்த டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் லிட்டருக்கு 86 கிமீ மைலேஜ் தருவதாகவும், இந்த மைலேஜை ARAI (இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம்) தரப்பில் இருந்து சான்றளித்துள்ளதாகவும் நிறுவனம் கூறுகிறது.


மேலும் படிக்க: குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான பைக்குகளை வாங்கணுமா? சிறந்த பைக்குகளின் பட்டியல் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR