புதுடெல்லி: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பற்றி பேசுகையில், மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்பிளஸ் (OnePlus) முதலிடத்தில் இருக்கும். ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்படுகின்றன, இது இந்தியாவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. OnePlus இந்தியாவில் OnePlus 9R ஐ இந்த ஆண்டு அதாவது 2021 இல் அறிமுகப்படுத்தியது. தற்போது மிகக்குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த போனுக்கு அந்நிறுவனம் பெரும் தள்ளுபடியை வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

OnePlus 9Rஐ இது போன்று மலிவாக வாங்குங்கள்
ஒன்பிளஸ் 9 (OnePlus 9R) தொடரின் கீழ் ஒன்பிளஸ் 9ஆர்டி என அழைக்கப்படும் மற்றொரு மாதிரியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது 9 தொடரில் கிடைக்கும் மற்ற மாடல்களை விட மலிவான சாதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் (Amazon) கிரைட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ஒன்பிளஸ் 9ஆர் விலை குறித்து பார்க்கலாம். ஒன்பிளஸ் 9ஆர் அடிப்படை வேரியண்ட் ஆக 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. தற்போது இந்த சாதனம் ரூ.36,999 ஆக இருக்கிறது. இதன் அசல் விலை ரூ.39,999 ஆகும். ஐசிஐசிஐ வங்கி (ICICI Credit Card) கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.3000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் விலை ரூ.33,999 ஆக வாங்கலாம்.


ALSO READ: Flipkart Offer: வெறும் ரூ. 740-க்கு கிடைக்கிறது அட்டகாசமான OPPO லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் 


எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு
அமேசான் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது, அதாவது உங்கள் பழைய போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், நீங்கள் ரூ.17,900 வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், நீங்கள் OnePlus 9Rஐ ரூ.16,099க்கு வாங்கலாம்.


இந்த போனின் சிறப்பு என்ன?
OnePlus 9R இன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதில் 48MP முதன்மை கேமரா, 16MP வைட்-ஆங்கிள் கேமரா, 5MP மேக்ரோ கேமரா மற்றும் 2MP மோனோக்ரோம் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பெறுவீர்கள். செல்ஃபி எடுப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும் இந்த போனில் 16MP முன்பக்க கேமராவும் உள்ளது. இந்த 5G ஸ்மார்ட்போன் 256GB நினைவகம், 4,500mAh பேட்டரி மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.


ALSO READ:ரகசியமாக வெளியானது Vivo மாஸ் ஃபோன், அதிரடி அம்சங்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR