குஷியில் Vivo வெறியர்கள்... வந்துவிட்டது Vivo V29 - விலை எவ்வளவு தெரியுமா?
Vivo V29 Series Launch: Vivo நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸான Vivo V29 மாடல் இந்தியாவில் இன்று வெளியானது. இதன் விலை, முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.
Vivo V29 Series Launch In India: Vivo V29 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸில் Vivo V29 மற்றும் Vivo V29 Pro ஆகியவை விற்பனைக்கு வருகின்றன. இந்த இரண்டு மொபைல்களின் வடிவமைப்பும் அற்புதமாக இருப்பதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் (Smartphone) வளைந்த வடிவமைப்பில் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. Vivo V29 சீரிஸின் அம்சங்களைப் பற்றி பார்ததால், Vivo V29 மற்றும் Vivo V29 Pro ஆகியவை Android 13 OS மூலம் வேலை செய்கின்றன. இந்த இரண்டு மொபைல் போன்களிலும் 50MP பின்பக்க மற்றும் செல்ஃபி கேமரா உள்ளது. இரண்டு 5G சாதனங்களிலும் வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
Vivo V29 Pro சிறப்பு என்ன?
Vivo V29 Pro ஆனது 2800 × 1260 பிக்சல்கள் ரெஸ்சொல்யூஷன் கொண்ட 6.78-இன்ச் வளைந்த டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போனில் MediaTek Dimensity 8200 பிராஸஸர், 12GB RAM மற்றும் 256GB இன்டெர்நல் ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13-இல் வேலை செய்கிறது.
50MP மெயின் லென்ஸ், 12MP போர்ட்ரெய்ட் மற்றும் 8MP வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்ட சிறந்த புகைப்படங்களைக் கிளிக் செய்ய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போனில் வீடியோ காலிங் செய்ய 50MP கேமரா உள்ளது. Vivo V29 Pro ஆனது 4600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது. இது Wi-Fi முதல் புளூடூத் மற்றும் USB Type-C போர்ட் வரை அனைத்தையும் கொண்டுள்ளது.
Vivo V29 என்னென்ன உள்ளன?
Vivo V29 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் வளைந்த டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதன் புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) 120Hz ஆகும். ஸ்னாப்டிராகன் 778ஜி பிராஸஸர் (Snapdragon 778G Processor) மொபலை சீராக செயல்பட வழிவகுக்கும். புகைப்படம் எடுப்பதற்கு, மொபைலில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் முதலாவது 50MP பிரதான லென்ஸ், 8MP அல்ட்ரா-வைட் மற்றும் 2MP பொக்கே சென்சார். செல்ஃபிக்கு 50எம்பி கேமரா உள்ளது.
Vivo V29 ஆனது 4,600mAH பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இது தவிர வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற வசதிகள் கைபேசியில் இணைக்கப்பட்டுள்ளது.
கடுமையான போட்டியும், விற்பனை தேதியும்..
Vivo நிறுவனத்தின் இந்த இரண்டு மொபைல்களும் இந்திய சந்தையில் Oppo, Realme மற்றும் Samsung போன்ற பிராண்டுகளின் மொபைல்களுடன் கடுமையாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Vivo V29 மொபைலின் விற்பனை அக்டோபர் 17 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், Vivo V29 Pro அக்டோபர் 10 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மொபைல்களின் விலை என்ன?
Vivo V29, இது 8GB + 128GB மற்றும் 12GB + 256GB என இரண்டு வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலைகள் முறையே ரூ.32,999 மற்றும் ரூ.36,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், Vivo V29 Pro மாடல் 8GB + 256GB மற்றும் 12GB + 256GB என இரண்டு வேரியன்டுகளில் கிடைக்கும். இவை முறையே ரூ.39,999 மற்றும் ரூ.42,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களின் முன்பதிவு இன்று (அக். 4) முதல் நடைபெறுகிறது.
மேலும் படிக்க | Google Pixel 8: இந்த மொபைலுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு... முன்பதிவு தேதி அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ