X-Ray Setu on Whatsapp: கொரோனா தொற்று பரவல் இன்னும் இந்தியாவை வாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இந்திய அரசாங்கம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொரோனாவுக்கு எதிரான போரில் ஒரு புதிய கருவியை உருவாக்கியுள்ளது. வாட்ஸ்அப் மூலம் இயக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எக்ஸ்-ரே சேதுவை (XraySetu ) அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த திட்டத்திற்காக, கோவிட் கண்டுபிடிப்பிற்கு ஆர்.டி.-பி.சி.ஆர் மற்றும் சி.டி ஸ்கேன் வசதி இல்லாத சிறிய நகரங்களில் உள்ள சுமார் 10,000 மருத்துவர்களை இதில் இணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கோவிட் கண்டறிதலுக்கான மூல உபகரணங்களுக்கு சிரமப்படும் கிராமப்புற மருத்துவர்களுக்கு இது ஒரு முக்கியமான கருவியாக இருக்கும். இதற்காக அரசாங்கம் இலாப நோக்கற்ற அமைப்பான ஆர்ட்பார்க் (Artpark ) மற்றும் நிராமையுடன் (Niramai) கூட்டு சேர்ந்துள்ளது.


“XraySetu என்பது டாக்டர்களுக்கான வாட்ஸ்அப்-உடன் இணைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மார்பு எக்ஸ்ரே விளக்க கருவியாகும். கடந்த 10 மாதங்களில் ARTPARK, நிராமாய் ஹெல்த் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் ஆகியவற்றின் AI ஆராய்ச்சியாளர்களின் ஒன்றுபட்ட முயற்சியால் வடிவமைக்கப்பட்ட Xraysetu மருத்துவர்கள் பயன்படுத்த விரைவான மற்றும் எளிமையான முறையாக அமைகிறது. இது இந்திய சுகாதாரத்தின் எதிர்காலத்திற்கான முன்மாதிரியாக இருக்கக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். எல்லோருக்கும் எல்லா இடத்திலும் கிடைக்கக்கூடிய விதத்தில் இது இருக்கும்" என்று வலைத்தளம் கூறுகிறது.


ஸ்டார்ட்-அப் நிறுவனமான நிராமய் மற்றும் ஐ.ஐ.எஸ்.சி உடன் இணைந்து எக்ஸ்-ரே செது உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆர்ட்வொர்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உமாகாந்த் சோனி செய்தி நிறுவனமான பி.டி.ஐ யிடம் தெரிவித்தார். AI தொழில்நுட்பத்துடன் செயலாக்கப்பட்ட எக்ஸ்ரேயைப் பயன்படுத்தி COVID-19 ஐக் கண்டறிய (COVID 19 Detection) புதிய தொழில்நுட்பம் உதவுகிறது. இதற்காக தற்போது கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.


ALSO READ: COVID-19: கொப்பளித்தால் போதும், மூன்று மணி நேரத்தில் முடிவை தரும் RT-PCR பரிசோதனை


"அடுத்த 15 நாட்களில் 10,000 மருத்துவர்களைக் கொண்ட ஒரு வலுவான வலையமைப்பை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அவர்கள் X-Ray Setu ஐ மேம்படுத்துவதில் பயிற்சி பெறுவார்கள். இதனால் கொரோனாவின் மூன்றாவது அலை (Coronavirus third wave) வரும்போது, கிராமப்புறங்களில் உள்ள மருத்துவர்களை அடையக்கூடிய தீர்வுகளுடன் நாம் தயாராக இருக்க முடியும்" என்று சோனி கூறினார். கடந்த ஒரு வாரமாக இந்த தொழில்நுட்பம் செயல்பட்டு வருவதாகவும், சுமார் 500 மருத்துவர்கள் இதைப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.


X-RaySetu-வைப் பயன்படுத்தி சோதனைகளை எவ்வாறு நடத்துவது என இங்கே காணலாம்: 


- இந்த புதிய தொழில்நுட்பத்தை (New Technology) முயற்சிக்க, மருத்துவர்கள் www.xraysetu.com என்ற வலைத்தளத்துக்கு செல்ல வேண்டும். இந்த அம்சம் தற்போது பீட்டா பதிப்பில் கிடைக்கிறது


- நீங்கள் வலைத்தளத்துக்கு சென்றவுடன், ‘Try the Free X-Ray Setu Beta’ பொத்தானைக் காண்பீர்கள்.


- நீங்கள் அந்த பொத்தானைக் கிளிக் செய்தவுடன், X-Ray Setu-வின் வாட்ஸ்அப் சாட் விண்டோவை அடைவீர்கள். 


- பின்னர் நீங்கள் நோயாளியின் எக்ஸ்-ரே படத்தை அதில் அனுப்பலாம். சில நிமிடங்களில் 2 பக்க நோயறிதல் தகவல்கள் உங்களுக்கு திருப்பி அனுப்பப்படும். அதன்பிறகு மருத்துவர் அந்த விவரங்களுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்க முடியும்.


இந்த கருவி கிராமப்புறங்களில் உள்ள மருத்துவர்கள், கதிரியக்க வல்லுநர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். XraySetu ஐப் பயன்படுத்தி, ஒரு கிராமப்புற மருத்துவர் சில நிமிடங்களில் மார்பு X-Ray இன் விளக்கத்தைப் பெற முடியும். இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதனால் குறைந்த தெளிவுத்திறன் கொண்ட படங்களையும் ஆராய்ந்து அரிய முடியும்.


ALSO READ:  Sputnik V தடுப்பூசியை தயாரிக்க அனுமதி கோரும் சீரம் நிறுவனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR