COVID-19: கொப்பளித்தால் போதும், மூன்று மணி நேரத்தில் முடிவை தரும் RT-PCR பரிசோதனை

பரிசோதனை சாதனத்தில் சலைன் திரவம் உள்ளது. அதனை வாயில் ஊற்றி, 15 விநாடிகள் கொப்பளித்து, குழாயில் உள்ள திரவத்தை சோதனைக்கு அனுப்ப வேண்டும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2021, 07:15 PM IST
COVID-19: கொப்பளித்தால் போதும், மூன்று மணி நேரத்தில் முடிவை தரும் RT-PCR பரிசோதனை title=

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடி வரும் நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே வைரஸைக் கண்டறிய புதிய மற்றும் விரைவான வழிமுறைகளை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பாடுபட்டு வருகின்றனர்.

இதை மனதில் கொண்டு, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தொல்லை இல்லாத ஆர்டி-பி.சி.ஆர் முறையை உருவாக்கியுள்ளது, இதில் மூன்று மணி நேரத்தில் முடிவுகளைப் பெற முடியும்.

பரிசோதனைக்கு மூக்கில் இருந்து மாதிரியை எடுக்க வேண்டியதில்லை. பரிசோதனை சாதனத்தில் சலைன் (saline) திரவம் உள்ளது. அதனை வாயில் ஊற்றி, 15 விநாடிகள் கொப்பளித்து, குழாயில் உள்ள திரவத்தை சோதனைக்கு அனுப்ப வேண்டும்.

மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இந்த செயல்முறையை மிகவும் புதுமையான உபயோகமான கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டார். "CSIR_NEERI உருவாக்கியுள்ள 'Saline Gargle RT-PCR Test' நாட்டில் COVID-19 பரிசோதனை வேகத்தை அதிகரிக்கும். பரிசோதனையில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

கொப்பளிப்பது  ஒரு சுலபமாக செய்யக்கூடிய செயல்முறையாகும், நோயாளிகள், எளிதாக, கஷ்டம் ஏதும் இல்லாமல் செய்ய முடியும்.

இதனால், செலவும் பெருமளவு குறையும் என கூறப்படுகிறது. ஏனெனில் மூக்கில் இருந்து சளி எடுக்க தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) தேவை என்பதோடு மட்டுமல்லாமல், சிறப்பு உள்கட்டமைப்பை உருவாக்கி பராமரிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

ALSO READ | Breathonix: இங்கே கொரோனா டெஸ்டிற்கு ‘ஊதினால்’ போதும், ஒரு நிமிடத்தில் முடிவு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News