5ஜி மொபைல் வாங்க நல்ல நேரம் மக்களே... அதிரடி விலை குறைப்பில் சாம்சங் ஸ்மார்ட்போன்!
Samsung Galaxy M14: இந்திய சந்தையில் கடந்தாண்டு அறிமுகமான சாம்சங்கின் அட்டகாசமான 5ஜி மொபைலின் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.
Samsung Galaxy M14 Price Discount: ஸ்மார்ட்போன்களை வாங்குவது நேரம் காலம் எல்லாம் தேவையில்லை. இருந்தாலும், நீங்கள் வாங்க நினைக்கும் ஸ்மார்ட்போனுக்கு எப்போதும் ஆப்பரில் தள்ளுபடி விலையில் கிடைக்கும், எப்போது அதற்கு வங்கி சலுகைகள், கூப்பன் ஆப்பர்கள் போன்றவை கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம்தான்.
அந்த வகையில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் நினைப்பவர்கள் தற்போது Redmi, Realme, OnePlus, Poco, iQOO போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்க ஆர்வங்காட்டிகிறார்கள். இருப்பினும், எப்படி ஐபோனுக்கான மவுஸ் குறையாமல் இருக்கிறதோ அதேபோல்தான் ஆண்ட்ராய்டில் சாம்சங் மொபைலுக்கான மவுஸும் குறையாமல் உள்ளது.
சாம்சங்கில் M சீரிஸ், A சீரிஸ் போன்ற மாடல்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுகின்றன. பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை எளிமையாகவும், குறைந்த விலையிலும் மொபைல் வாங்க வேண்டும் என்றால் சாம்சங் நிறுவனத்தைதான் தேர்வு செய்கிறார்கள், அதிலும் முன்னணியில் இருப்பது சாம்சங் கேலக்ஸி M14 (Samsung Galaxy M14) மொபைல் எனலாம்.
இந்நிலையில், குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி M14 ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தால், இதுவே சிறந்த நேரமாகும். சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு இந்த மொபைலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.
மேலும் படிக்க | பிளிப்கார்ட்டின் அசத்தல் திட்டம்! இனி ஒரே நாளில் டெலிவரி செய்யப்படும்!
அதன் பின் தற்போது அந்த மொபைலின் விலையை குறைத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி M14 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த இரண்டின் விலையையும் சுமார் 1,000 ரூபாய் அளவில் சாம்சங் குறைந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி M14 முக்கிய அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிக வேகமானதாக இருக்கும். அந்தளவிற்கு, புதிய தொழில்நுட்பத்தை இந்த மொபைல் உட்கொண்டுள்ளது. இதில் தெளிவான மற்றும் பெரியளவில் 6.6-இன்ச் திரை உள்ளது. 90Hz புதுப்பிப்பு விகிதம் (Refresh Rate) உள்ளதால் இது மிகவும் மென்மையாக இயங்குதலை வழங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி M14 பிற அம்சங்கள்
இந்த மொபைலில் கேமரா அமைப்பு குறித்தும் நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். பின்புறத்தில் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 50MP + 2MP + 2MP என மூன்று கேமரா அமைப்பு உள்ளது. வீடியோ அழைப்புகள் மற்றும் செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 13MP கேமர பொருத்தப்பட்டுள்ளது.
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் (Operating System) மூலம் இயங்குகிறது. இதன் பேட்டரியும் பெரியதாகும். அதாவது, 6000mAh பேட்டரியை இந்த மொபைல் கொண்டுள்ளது. இதில், 25W விரைவாக சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது. குறிப்பாக, இந்த மொபைல் 5ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போன் சில்வர், ப்ளூ மற்றும் ஸ்மோக்கி டீல் ஆகிய மூன்று வண்ணங்களில் வருவது குறிப்பிடத்தக்கது.
விலை விவரங்கள்
முன்னதாக கூறியது போல், இந்த மொபைல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, சாம்சங் கேலக்ஸி M14 மொபைல் 4ஜிபி RAM + 64ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ், 6ஜிபி RAM + 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
4ஜிபி RAM + 64ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் வேரியண்ட் 13,490 ரூபாய்க்கும், 6ஜிபி RAM + 128ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் வேரியண்ட் 14,990 ரூபாய்க்கும் இதுவரையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது சாம்சங் நிறுவனம் இதன் விலையை சுமார் 1000 ரூபாய் குறைத்துள்ளது. இதன்மூலம் தற்போது 4ஜிபி + 64ஜிபி வேரியண்ட் 12,490 ரூபாய்க்கும் மற்றும் 6ஜிபி + 128ஜிபி 13,990 ரூபாய்க்கும் வாங்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ