காதலர் தினத்தில் லவ்வருக்கு கிப்ட் கொடுக்கணுமா...? அதிரடி தள்ளுபடியில் இந்த மொபைல்கள்

Valentines Day Sale 2024: காதலர் தினத்தை முன்னிட்டு உங்கள் இணையருக்கு மொபைல் பரிசளிக்க வேண்டும் என்றால், இந்த மாடல்கள் தற்போது அதிரடி விலையில் கிடைக்கின்றன. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 4, 2024, 06:54 PM IST
  • இந்த விற்பனை வரும் பிப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
  • இந்த விற்பனை வரும் பிப். 12ஆம் தேதி நிறைவடையும்.
  • அமேசான் மற்றும் Realme தளங்களில் இந்த சலுகையயை பெறலாம்.
காதலர் தினத்தில் லவ்வருக்கு கிப்ட் கொடுக்கணுமா...? அதிரடி தள்ளுபடியில் இந்த மொபைல்கள்

Realme Valentines Day Sale 2024: ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் ஏதாவது பண்டிகைகள் நெருங்கிவிட்டாலே சலுகை விலையில் விற்பனைக்கு வரும். பொங்கல், குடியரசு தினம், ஹோலி, சுதந்திர தினம், தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் தொடங்கி பல பண்டிகைகளுக்கு பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்கள் கடும் தள்ளுபடி விற்பனை நடைபெறும்.   

Add Zee News as a Preferred Source

இ-காமர்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கும் சலுகைகள் ஒருபுறம் இருக்க, மின்னணு தயாரிப்பு நிறுவனங்களும் சில சமயங்கள் தள்ளுபடிகளை அறிவிக்கும். அந்த வகையில், Realme நிறுவனம் அதன் Narzo சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு தற்போது தள்ளுபடியை அறிவித்துள்ளது. 

அதாவது வரும் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த தள்ளுபடி விற்பனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தள்ளுபடி வரும் பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Realme Narzo 60 ப்ரோ சீரிஸ் 5ஜி, Realme Narzo 60x 5ஜி, Realme Narzo N53 மற்றும் Realme Narzo N55 உள்ளிட்ட நான்கு மாடல்கள் மட்டுமே இந்த விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

மேலும் படிக்க | பிளிப்கார்டின் ஒரே நாள் டெலிவரி சேவை: எப்படி பெறுவது?

Narzo சீரிஸில் மொபைல்கள் வாங்க வேண்டும் என நினைத்தால் இவற்றை முயற்சிக்கலாம். குறிப்பாக, இவை மலிவு விலையிலும், பல அம்சங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட்போன்களாகும். எனவே, இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த சலுகையை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை ஆர்வமுள்ள வாங்குவோர் Amazon அல்லது Realme நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லலாம்.

Realme Narzo N55

இந்த மாடலின் 6ஜிபி+128ஜிபி வேரியண்டிற்கு 4000 ரூபாய் வங்கி தள்ளுபடி உள்ளது. Realme Narzo N55 மொபைலின் இறுதி விலை 8,999 ரூபாயாக இருக்கும்.

Realme Narzo 60x 5G

இந்த மொபைலின் 4ஜிபி+128ஜிபி மற்றும் 6ஜிபி+128ஜிபி ஆகிய இரண்டு வேரியண்ட்களும் 2000 ரூபாய் வங்கி தள்ளுபடியையும், ரூ.500 கூப்பனையும் பெறலாம். இந்த சலுகைகள் மூலம், Realme Narzo 60x 5G மொபைல் 4ஜிபி+128ஜிபி 10,999 ரூபாய்க்கும், மற்றும் 6ஜிபி+128ஜிபி வேரியண்ட் 11,999 ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஐபோன் டிசைனில் 6 ஆயிரம் ரூபாய் விலையில் புதிய மொபைல்.!

Ream Narzo 60 Pro 5G

இந்த மொபைலின் மொபைலின் 8ஜிபி+128ஜிபி, 12ஜிபி+1TB என இரண்டு வேரியண்ட்களுக்கும் 2000 ரூபாய் வங்கி தள்ளுபடியை நீங்கள் பெறலாம். மேலும் 12ஜிபி+256ஜிபி வேரியண்டுக்கு 4000 ரூபாய் கூப்பனையும் நீங்கள் பெறலாம். இந்த சலுகைகளுடன் Realme Narzo 60 ப்ரோ 5ஜியின் இறுதி விலை முறையே 8ஜிபி+128ஜிபி மாடல் 21,999 ரூபாய், 12ஜிபி+256ஜிபி மாடல் 22,999 ரூபாய் மற்றும் 12ஜிபி+1TB வேரியண்ட் 27,999 ரூபாயாகும். 

Realme Narzo N53

இந்த மாடலின் 4ஜிபி+64ஜிபி வேரியண்ட் மொபைல் 1000 ரூபாய் கூப்பனுடன் கூடுதலாக 500 ரூபாய் வங்கி தள்ளுபடி உடன் வருகிறது. இதேபோல், 8ஜிபி+128ஜிபி வேரியண்ட் 2500 ரூபாய் மதிப்புள்ள கூப்பனைப் பெறுகிறது. இதனால் 4ஜிபி+64ஜிபி 7,499 ரூபாய்க்கும், 8ஜிபி+128ஜிபி வேரியண்ட் 9,499 ரூபாய்க்கும் கிடைக்கும்.

Realme Narzo 60 5G

இந்த மொபைல் 8ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+256ஜிபி ஆகிய இரண்டு வேரியண்ட்களிலும் 2000 ரூபாய் வங்கி தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், 1000 ரூபாய் மதிப்புள்ள கூப்பனையும் நீங்கள் பெறலாம். இதனால் Realme Narzo 60 5G மொபைலின் இறுதி விலை 8ஜிபி+128ஜிபி மாறுபாட்டிற்கு 14,999 ரூபாயாகவும், 8ஜிபி+256ஜிபி வேரியண்ட் 16,999 ரூபாயாகவும் இருக்கும்.

மேலும் படிக்க | வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு 2500 ரூபாய் ஆபர்..!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News