அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட யுகா லேப்ஸ் என்னும் நிறுவனத்தில் சைபர் பாதுகாப்பு பொறியாளராக பணிபுரிபவர் சாம் கரி. அவர் கடந்த செப். 14ஆம் தேதி போட்ட ட்வீட் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில்,"கூகுள் நிறுவனம் எனக்கு 2,49,999 அமெரிக்க டாலர் அனுப்பிவைத்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டது. ஆனால், இதுவரை கூகுளிடம் இருந்து எனக்கு எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. கூகுளிடம் தொடர்புகொள்ள வேறு எதும் வழி இருக்கிறதா" என குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி, அந்த பணம் உங்களுக்கு வேண்டாம் என்றால் பரவாயில்லை என்றும் அந்த ட்வீட்டின் முடிவில் வேடிக்கையாகவும் பதிவிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உங்களை பணக்காரராக்கும் Google.. இதை செய்து ரூ. 25 லட்சம் பரிசை பெறுங்கள்


தன்னை ஹேக்கர் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், கூகுள் போன்ற நிறுவனங்களின், சாஃப்வேர்களில் ஏதும் குறைப்பாடு இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து கூறும் பணியை இதற்கு முன் மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அவ்வாறு குறைகளை கண்டுபிடித்து கொடுக்கும்பட்சத்தில் அந்நிறுவனம் அவருக்கு பெரிய தொகையை அளிக்கும். ஆனால், தற்போது அப்படி எதையும் தான் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 



உரிமைக்கோரப்படாத அந்த பணம் தனக்கு தான் என்றாலும், கூகுள் பதிலளிக்கும்பட்சத்தில், வரிகளை தவிர்க்க அதை வேறு வங்கி கணக்கு மாற்றிக்கொள்வேன் என கூறியிருந்தார். ஆனால், பெரும்பாலும் இது தவறுதலாக அனுப்பட்டதாகவே இருக்கும் என நினைக்கிறேன் எனவும் தெரிவித்தார். 


அதன்படி, அவரின் கணிப்பு சரியாகிவிட்டது. தவறுதலாக அந்த தொகையை அவருக்கு அனுப்பிவிட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் கூறுகையில்,"மனித தவறு காரணமாக எங்கள் அணியினர் சமீபத்தில் தவறான நபருக்கு அந்த தொகையை அனுப்பிவிட்டனர். எங்களை உடனடியாக தொடர்புகொண்டது பாராட்டுகிறோம்" என்றார். 


கடந்த வியாழக்கிழமை அந்த பணம் சாம் கரியின் வங்கி கணக்கிலேயே இருந்துள்ளது. வெள்ளிக்கிழமையில் தான் அந்த பணம் குறித்து கூகுள் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சாம் கரி ஊடகங்களிடம் கூறுகையில்,"கூகுள் என்னை தொடர்பு கொண்டது. தற்போது அந்த பணத்தை திரும்பச் செலுத்துவதற்குதான் சென்று கொண்டிருக்கிறேன்" என்றார்.


மேலும் படிக்க | என்ன கொடுமை சார் இது? $72 மில்லியன் அபராதமா? அதிருப்தி அடையும் கூகுள் மற்றும் மெட்டா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ