Google Bug Tracker: கூகிள் நிறுவனம் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகிளின் (Google) புதிய அறிவிப்பின்படி, கூகிள், தனது ஆண்ட்ராய்டு 12-ன் இரண்டு பிள்டிலும் பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து சொல்பவர்களுக்கு ரூ .7 கோடி ரூபாய்க்கான ரொக்கப்பரிசை வழங்கும். 


கூகிள் சமீபத்தில் Android 12 இன் பொது பீட்டா பதிப்பை வெளியிட்டது. Android 12 இன் பீட்டா பதிப்பு தற்போது சில பயனர்களுக்கு மட்டும் அளிக்கப்படுகின்றது. அதன் ஸ்டேபிள் பதிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும். 


Android 12 இன் பீட்டா பதிப்பில் சில அம்சங்களை நீங்கள் அனுபவிக்க முடியும். பீட்டா பதிப்பில் பிழைகள் (Bugs) இருக்கலாம். இதை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். இது உங்கள் தொலைபேசியின் (Smartphone) செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப நிபுணர்கள் Android 12 இல் உள்ள குறைபாட்டை கண்டறிந்து சொல்லலாம் என கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது.


ALSO READ: டாக்டர் ஆனது Google: இனி போன் மூலமே 288 நோய்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்!!


இந்த தேதிக்குள் இதை செய்ய வேண்டும் 


மே 18 முதல் ஜூன் 18-க்குள் தவறுகளை கண்டுபிடிப்பவர்களுக்கு, பரிசுத் தொகையுடன் 50 சதவிக்கித போனஸ் தொகையும் கிடைக்கும் என கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சில ஆண்ட்ராய்டு அல்லாத குறைபாடுகள் அண்ட்ராய்டு பாதுகாப்பை பலவீனப்படுத்துகின்றன என்று நிறுவனம் கருதுகிறது.


கூகிள் பக் பவுண்டி புரொக்கிறாமில் (Google Bug Bounty Program) பங்குகொள்ள நினைக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் Android 12 Beta 1 மற்றும் Android 12 Beta 1.1 ஆகியாவற்றை பகுப்பாய்வு செய்ய வேண்டும். Android பாதுகாப்பு பரிசுத் திட்டத்தில் தகுதி வாய்ந்த சாதனத்தில் இருக்கும் பிழைகள் (Bugs) இருக்கும். இது நிறுவனத்தின் பிற பரிசுத் திட்டத்தின் ஒரு பகுதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க தகுதியான சாதநங்கள் பின்வருமாறு:


பிக்சல் 5, பிக்சல் 4a, பிக்சல் 4a 5G, பிக்சல் 4, பிக்சல் 4XL, பிக்சல் 3 a, பிக்சல் 3a XL, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL.


ALSO READ: Google Photos: ஜூன் 1ம் தேதி முடிவடையும் இலவச ஆபர்; நீங்கள் செய்ய வேண்டியது என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR