உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் கூகுள் ப்ளஸ் சேவையை தொடங்கியது. பயனாளர்கள் தரும் அழைப்பின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தற்போது கூகுள் பிளஸ் மூலம் அதன் பயனாளர்கள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக, அமெரிக்காவின் பிரபல ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் நேற்று செய்தி வெளியானது. இந்தச் செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே கூகுள் பிளஸ் சமூகவலைத்தளம் நிரந்தரமாக மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. 


அந்த வகையில் பல்வேறு வசதிகளை நிர்வகித்து வரும் கூகுள், தனது சமூக வலைதளமான கூகுள் ப்ளஸை மூடுவதாக நேற்று அறிவித்தது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் கூகுள் பிளஸ் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 மாதங்களுக்குள் பயனாளர்கள் தங்களின் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. கூகுள் பளஸ் தனிநபர் கணக்குகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.