இனி நம்ம ஏரியாவில் நடக்கும் செய்தியை அறிய: Bulletin App!
கூகுள் நிறுவனம் Bulletin எனும் புதிய அப்ளிக்கேஷனை உருவாக்கி சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
புல்லட்டின் ஆப் மூலம் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வதுடன் நமது அருகாமையில் நடக்கும் செய்திகள், சுவாரசிய நிகழ்வுகளை செய்திகளாக புல்லட்டின் ஆப்பிற்கு அனுப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த அப்ளிக்கேஷனில் செய்தியை எழுத்து பதிவாகவோ அல்லது படங்கள், வீடியோக்கள் மூலமாகவோ மக்கள் பதிவேற்றம் செய்ய முடியும். செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவரும் இளைஞர்களுக்கு இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
கூகுள் தேடலிலிருந்தும் புல்லட்டின் செய்திகளை தெரிந்து கொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனை முடிந்தபின் இந்த புல்லட்டின் (Bulletin) ஆப் அண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் இலவசமாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.