இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் முறையை அறிமுகபடுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலகட்டத்தில் இணையதளம் ஒரு மாபெரும் ஊடக சக்தியாக விலகுகிறது. மக்களை சென்றடையும் பெரும் கருவியாகவே இணையதளம் இருந்து வருகிறது. ஏன் இளைய தலைமுறைகளின் ஹீரோ இணையதளம் என்று கூறுவது சரியாக பொருந்தும். ஏனென்றால், பலரும் இணையத்தில் மூழ்கிப் போயுள்ளனர். அதற்க்கு ஏற்றார்போல் பல இணைய நிறுவங்களும் வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் ஒரு வசதியை அட்டகாசமான ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 


அதன்படி பயனாளர்கள் இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான க்ரோம் செயலி நீங்கள் Wi-Fi நெட்வொர்க் பயன்படுத்தும் போது, உங்களுக்கு பயன்தரும் செய்திகள் மற்றும் தானாக டவுன்லோடு செய்து வைக்கும். இவற்றை இன்டர்நெட் இல்லாத நேரங்களில் பயன்படுத்த முடியும். இதனால் டேட்டா இணைப்பு சீராக இல்லாத சமயங்களிலும் பயனுள்ள செய்திகளை படிக்க முடியும்.


மூன்றாம் தரப்பு செயலிகளின் மூலம் சில இணையப்பக்கங்களை ஆஃப்லைனில் சேமித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படும் நிலையில், இவற்றை பயன்படுத்த செய்திகளை பயனர் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். கூகுள் க்ரோமின் புதிய அப்டேட் பயனர் வசிக்கும் இடம் மற்றும் விருப்பங்களை புரிந்து கொண்டு தானாக செய்திகளை டவுன்லோடு செய்யும்.


கூகுள் உங்களுக்கென தேர்வு செய்யும் செய்திகள் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு விருப்பமானதாக இருக்காது என்றாலும், பல முறை இவை உங்களுக்கு பயன்தரும் ஒன்றாக இருக்கும். எனினும் இந்த சேவை தானாக இயங்கும் என்பதால் ஆஃப்லைனில் இருக்கும் போதோ அல்லது பயணங்களின் போதோ செய்திகளை வாசிக்க நினைப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும்.


இந்த வசதி தற்போது இந்தியா நைஜீரியா, பிரேசில் போன்ற 100 நாடுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.