Google நிறுவனத்தின் உலாவி Google Chrome துவங்கப்பட்டு இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Google Chrome ஆனது கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் நாள் துவங்கப்பட்டது. துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து புதுபுது அம்சங்களை அறிமுகப்படுத்தி வரும் Google Chrome இன்றளவும் இணைய தேடல் உலகில் பிரதாண இடத்தினை பிடித்துள்ளது.


Google Chrome-ன் கூகிள் நிறுவனம் அறிமுகம் செய்கையில்... வழக்கத்தில் இருந்த உலாவிகளுக்கு மத்தியில் தனிதுவமாக செயல்பட்டு முதன்மை இடத்தினை பெறும் என கூகிள் நினைத்தது. தற்போது இந்த கூற்று உன்மையாகியுள்ளது. இதன் விளைவாக தான் இணையத்தினையும் கூகிளினையும் பிரிக்க இயலாத வகையிலான ஒரு பந்தத்தினை நெட்டீசன்கள் உறுவாக்கியுள்ளனர்.


இணைய உலகில் பல புதிய யுக்திகளை வெளிப்படுத்தி வரும் Google Chrome ஆனது, நடைமுறையில் உள்ள உலாவிகளின் பயன்பாட்டில் 60% மதிப்பினை பெற்றுள்ளது என ஒர் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.


Google Chrome அறிமுகம் செய்யப்பட்ட போது வெறும் Windows இயங்குதளத்தில் மட்டுமே இயங்கும் வகையில் உறுவாக்கப்பட்டுள்ளது. பின்னர் Linux, MAC போன்ற இயங்குதளங்களில் இயங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.


Chrome-ன் அறிமுகத்தினால் தற்போது Apple நிறுவனத்தின் WebKit, Mozilla Firefox போன்ற உலாவிகளின் தாக்கம் பயனர்களிடையே பெருமளவிக் குறைந்துள்ளது. Chrome தொடர்ந்து தனது பயனர்களுக்கு பயன்படும் வகையில் பல செயலிகளை வெளியிட்டு வருவதும் இதற்கான ஒரு காரணமாக அமைந்துள்ளது.