சுமார் கி.பி.1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மன்னர் அஜய் சிங், தனது அலுவல் வசதிக்காக புதிதாக ஒரு அரண்மனையை மார்வார் என்ற வனப்பகுதியில் அமைக்க முயன்றார். ஆனால், அந்த பகுதியில் இருந்த மரங்கள் அவரது விருப்பத்திற்கு தடையாக இருந்தது. அப்பகுதியில் இருந்த மரங்களை வெட்ட அவர் தனது ஆட்களை அனுப்பினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், அந்த பகுதியில் வாழ்ந்து வந்த 'பிஷ்ணோய்' என்ற இன மக்கள் மரங்களை தெய்வமாக கருதி வாழ்ந்து வந்திருக்கின்றனர். மன்னரின் ஆணையை கேட்ட மக்கள் முடிந்தவரை தங்கள் எதிர்ப்பை தெரிவித்தும் பலன் அளிக்கவில்லை. மன்னரின் உத்தரவின் படி வீரர்கள் மரங்களை வெட்ட வந்தனர். மரங்களை வெட்டுவதற்கு முன்னர் தம்மை வீழ்த்தச் சொல்லிப் பெண்களும் குழந்தைகளும் மரங்களைக் கட்டிப்பிடித்தபடி போராடினர்.



இதை தொடர்ந்து அந்த வீரர்களும் மன்னரின் உத்தரவை மீற முடியாமல் மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயான அம்ரிதா தேவியையும் அவரின் குழந்தைகளையும் முதலில் வெட்டிச் சாய்த்தார்கள். 


அதையடுத்து, 363 மரங்களையும் அதனை கட்டிப் பிடித்த மனிதர்களையும் வெட்டி சாய்த்தனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் மனம் இளகிய மன்னர் இந்த இடம் வேண்டாம் என சொல்லி, போர் வீரர்களை திரும்பி வரச்சொல்லி உத்தரவிட்டார்.


இந்த சம்பவம் தான் இந்தியளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடைபெற்ற முதல் எதிர்ப்பு போராட்டம். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் இந்த இயக்கத்துக்கு சிப்கோ இயக்கம்' என்று பெயரிட்டனர்.



இந்த நிலையில் இந்த இயக்கத்தை தோற்றுவிக்க காரணமாக இருந்த சுந்தர்லால் பகு குணாவுக்கு இந்திய அரசு தாமாக முன்வந்து 1981-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்தது. ஆனால் இந்த விருதை வாங்க அவருக்கு மனசாட்சி இடம் கொடுக்க வில்லை. எனவே அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். 


அந்த விருதை மறுக்க காரணம் என்னவென்று அவர் தெரிவித்தது....!


''இமய மலைப் பகுதியில் தினம் தினம் ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது. பாரத மாதாவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த 'வளமான மண்’, கடலை நோக்கித் தினமும் போய்க்கொண்டு இருக்கிறது. அது என்று தடுக்கப்படுகிறதோ, அன்று தான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும் என அவர் கூறியுள்ளார்.  


இந்தியாவில் மிகப் பெரிய அளவில் உணர்த்திய, விழிப்புணர்வை ஏற்படுத்திய போராட்டமாக இந்த போராட்டம் கருதபடுகிறத!