’கூகிள் டூடில்’ - யார் இந்த பிரபலம்!
பிரபல கஜல் இசைப்பாடகர் பேகம் அக்தர்-ன் 103-வது பிறந்தநாளை கெண்டாடும் விதமாக இன்று கூகிள் சிறப்பு டூடில் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அக் 7, 1914 ஆம் நாள் உத்தர பிரதேச மாநிலம் பாசியாபாத்தில் பேகம் அக்தர் பிறந்தார். புகழ்பெற்ற பாரம்பரிய இசைக்கலைஞர்களான அதா முகமது கான் (பாட்டியாலா கரனா), அப்துல் வாகித் கான் (கிரனா கரனா) ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றவர்.
தும்ரி, தாத்ரா இசையை பாடுவதில் தனக்கென தனி அடையளத்தை உருவாக்கியவர். பூரப் மற்றும் பஞ்சாபி பாணி என இரண்டையும் கலந்து பாடுவதில் வல்லமை பெற்றவர். அவரின் கஜல் இசைக்கென தனி ரசிகர் கூட்டத்தினை பெற்றவர்.
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றவர். கசல்களின் இராணி என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்பட்டார்.
இந்திய இசைக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பேகம் அக்தருக்கு மரியாதை செலுத்தும் வீதமாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு கூகிள் இந்து சிறப்பு டூடிலினை வடிவமைத்துள்ளது!